
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பாக மதுரை தாமரை தொட்டி அருகே உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தொடர் முழக்கப் போராட்டம் மாவட்டத் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது.
சாலை பணியாளர்கள் சாலை பராமரிப்பு பணி மேற்கொள்வதற்குஉரிய கருவி தளவாடம், மழைக்கோட்டு, காலனி, உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களில் உயிர் நீத்தோர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் விரைந்து வழங்க வேண்டும்.
பணி மாறுதல் வழங்கப்பட்டு 20 வருடங்கள் பணி நிறைவு செய்த சாலை பணியாளர்களுக்கு சிறப்பு நிலை தேர்வு நிலைக்கான ஆணையும், அதற்கான பணப்பலன்களை வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர்கள் பால்ராஜ், மணிமாறன் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர்கள் மாரியப்பன், ரவிச்சந்திரன், மாநிலத் துணைத் தலைவர் ராஜமாணிக்கம், மாவட்ட செயலாளர் சோலையப்பன் உள்பட சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாநில பொருளாளர் இரா.தமிழ், மாவட்ட பொருளாளர் முருகன் ஆகியோர் நன்றியுரை கூறினர்.