
தமிழக அரசு வழங்க உள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு,தேங்காய் போன்றவைகளையும் சேர்த்து வழங்க கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக விவசாய அணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர் வலசை முத்துராமன் ஜி தலைமையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று மாநிலத் துணைத் தலைவரும், சென்னை பெருங்கோட்ட பொறுப்பாளருமான கரு.நாகராசன் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர் தேவர், பொதுச் செயலாளர் பிரவீன், மாநில செயலாளர் ராமலிங்கம், சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலன், விவசாய அணி மாவட்ட தலைவர்கள் சுந்தரலிங்கம், ஸ்ரீதேவி, ராஜா, அன்பழகன், எஸ்.திருநாவுக்கரசு , ஏழுமலை, ஆர் திருநாவுக்கரசு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.