
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 98 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை கிழக்கு மாவட்டம் சார்பில் உத்தங்குடி 9வது வார்டு பகுதியில் நல்லாட்சிகள் தினமாக கொண்டாடப்பட்டது.
இவ்விழா வர்த்தகப் பிரிவு மாவட்ட தலைவர் வெள்ளைச்சாமி தலைமையிலும், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் செல்வமாணிக் கம் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் கிழக்கு மாவட்ட தலைவர் இராஜசிம்மன் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
மேலும் பாஜகவில் புதிதாக இணைந்தவர்களுக்கு அடையாள அட்டையை மாவட்ட தலைவர் இராஜசிம்மன் வழங்கினார்.
இந்நிகழ்வில் மணிகண்டன் ஊடகப்பிரிவு துணைத்தலைவர், ச.சண்முகசுந்தரம் மாவட்ட செயலாளர் கிழக்கு மாவட்ட ஊடகப்பிரிவு, மற்றும் பத்மநாதன், திருப்பதி, பாலமுருகன், வெங்கடேஸ்வரி, விமலாதேவி நாகராஜ் உள்ளிட்ட பாஜக மாநில, மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்