
தமிழக அரசு சார்பாக வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு ,வெல்லம், தேங்காய் போன்றவைகளையும் சேர்த்து வழங்க கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜக விவசாய அணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் செந்தூர்பாண்டியன் தலைமையிலும், பாஜக மாநகர் தலைவர் மகா.சுசீந்திரன், கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன், மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார் ஆகியோர் முன்னிலையிலும், விவசாய அணி மேற்கு மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி, மாநகர் மாவட்ட தலைவர் துரைபாஸ்கர், கிழக்கு மாவட்ட தலைவர் பூமிராஜன் ஏற்பாட்டிலும், நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்