
மதுரை டி.வி.எஸ் பள்ளியின் பொன்விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும் டிவிஎஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து டிவிஎஸ் குழும இயக்குனர் சீனிவாசன் தலைமையில் பொன்விழா ஜோதி பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து புறப்பட்டு, ஜெய்ஹிந்த்புரம் வழியாக வந்து டிவிஎஸ் பள்ளியை சென்றடைந்தது.
பள்ளியின் தாளாளர் வெங்கட் நாராயணன் பொன்விழா ஜோதியை பெற்றுக் கொண்டார். முன்னதாக நடந்த நிகழ்ச்சியின் போது பள்ளி வளாகத்தில் தேசியக் கொடியை உதவி இயக்குனர் மைதிலி சுந்தர்ராஜன் ஏற்றி வைத்தார். பள்ளியின் கொடியை முதல்வர் அருணா குமாரி ஏற்றினார்.
பின்னர் மாலையில் நடந்த பொன்விழா கொண்டாட்டத்திற்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குனர் வெங்கடேஷ் பிரசன்னா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டிவிஎஸ் சப்ளை சயின்ஸ் நிறுவனத்தின் முதன்மை துணை இயக்குனர் தினேஷ் பொன்விழா மலரை வெளியிட டாக்டர் பிரசன்னா பெற்றுக் கொண்டார்.
இவ்விழாவில் லட்சுமி வித்யா சங்க நிர்வாக இயக்குனர் ஷோபனா, மெட்ரிக் பள்ளி இயக்குனர் நாகராஜ் முருகன் உள்பட முக்கிய பிரமுகர்கள் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
.