
கிறிஸ்மஸ் பண்டிகையை யொட்டி மதுரை அண்ணாநகர் வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்று விட்டு வந்த கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி நற்பணி இயக்க மாவட்ட செயலாளர் சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் கேக் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறினார்.
இந்நிகழ்வில் ராமலிங்கம், தங்ககுமார், பூமிராஜ், அழகர், முருகன், பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்து மதத்தை சேர்ந்தவர்கள் கிறிஸ்துவ சகோதரர்களுக்கு சர்ச்சுக்கு நேரடியாக வந்து கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.