
38 லட்சம் மதிப்பீட்டில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் புதிய கட்டிட திறப்பு விழா. குத்தாலம் அருகே கோமல் ஊராட்சியில் நடந்தது. நிவேதா முருகன் எம்எல்ஏ பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோமல் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 38 லட்சம் மதிப்பீட்டில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் புதிய கட்டிடம் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.
மயிலாடுதுறை வேளாண்மை இணை இயக்குனர் சேகர் கோமல் ஊராட்சி மன்ற தலைவர் எழிலரசி பாலசுப்பிரமணியன் துணைத் தலைவர் ஜேசுதா ரமேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். குத்தாலம் வேளாண்மை உதவி இயக்குனர் வெற்றிவேலன் வரவேற்றார்.இதில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து பேசினார்.
மேலும் வேளாண்மைதுறை சார்பில் 2 பயனாளிகளுக்கு மானிய விலையில் சுழல் கலப்பைகள் தென்னங்கன்றுகள்,நெல் விதை, உரங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். அப்போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், திமுக குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர், மேற்கு ஒன்றிய செயலாளர் எழுமகளூர் ராஜா,ஒன்றிய குழு உறுப்பினர் வக்கீல் வினோத்,உதவி வேளாண்மை அலுவலர்கள் சந்திரசேகரன், சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் குத்தாலம் துணை வேளாண்மை அலுவலர் ராஜன் நன்றி கூறினார்.