
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் ஆகியோர் அறிவுறுத்தலின்படியும், விவசாய அணி மதுரை மேற்கு மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி ஆலோசனைப்படி,
மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில்
பொதுச்செயலாளர் ரத்தினசாமி, சுரேஷ் துணை தலைவர் மகாலிங்கம், மாவட்ட செயலாளர் பெருமாள், மண்டல தலைவர் பாலச்சந்திரன் ஆகியோர் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இயற்கை விவசாயம் செய்யும் விவசாயி ராயபாளையத்தை சேர்ந்த பழனியப்பன், தேவராஜ், வலையப்பட்டி அய்யாவு, நக்கலக்கோட்டை பாண்டுரங்கன், அம்மாபட்டி சுப்புராஜ் உள்ளிட்ட விவசாயிகளை சந்தித்து இயற்கை விவசாயத்தைப் பற்றி கலந்துரையாடினர்.