Saturday , June 3 2023
Breaking News
Home / உலகம் / மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாசில்தார் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் வாரம்.!
MyHoster

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாசில்தார் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் வாரம்.!

குத்தாலம் தாசில்தார் அலுவலகத்தில் முதல்வரின் முகவரி துறை சார்பில் சிறப்பு குறைதீர் வாரம்.மயிலாடுதுறை சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 19ஆம் தேதி முதல் எதிர்வரும் 25ஆம் தேதி வரை நல்லாட்சி வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் நேற்று தாசில்தார் அலுவலகத்தில் முதல்வரின் முகவரி துறை சார்பாக சிறப்பு குறைதீர் வாரம் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது குறைகள் தொடர்பாக மனு அளித்தனர். பொதுமக்களிடமிருந்து மனுக்களை மயிலாடுதுறை சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் கண்மணி பெற்றுக் கொண்டார்.அப்போது அவர் கூறுகையில் பெறப்பட்ட மனுக்கள் உடனடியாக தீர்வு காணப்படும் என்றும் எதிர்வரும் 25ஆம் தேதி வரை மனுக்கள் பெறப்படும் எனவும் தெரிவித்தார் முகாமில் பெறப்பட்ட மனுக்களில் 10 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை காண ஆணைகளும், 2நபர்களுக்கு வாரிசு சான்றுகளும், 2நபர்களுக்கு நகல் பட்டாவும் வழங்கப்பட்டது. அப்போது குத்தாலம் தாசில்தார் கோமதி, குத்தாலம் தனி தாசில்தார் சண்முகம்,தலைமை இடத்து துணை தாசில்தார் பாபு,வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் பரமானந்தம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கல்வி உதவித்தொகை ஆணைகளை பெற்றுக் கொண்ட மாணவ மாணவிகள் சிறப்பு முகாம் அமைத்து உடனடியாக சான்றுகள் வழங்க நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதலமைச்சருக்கும், தமிழக அரசிற்கும், அரசுத்துறை அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் திருமுருகன்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

தேனி மாவட்டம், திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா.!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய புணருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES