Wednesday , May 31 2023
Breaking News
Home / உலகம் / மதுரையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாநகராட்சி கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு.!
MyHoster

மதுரையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாநகராட்சி கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு.!

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து மதுரை மாநகராட்சி கல்வி அலுவலர் அவர்களை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்ட செயலாளர்.சீனிவாசன் தலைமையில் சந்தித்தனர்.

அச்சந்திப்பின்போது, மதுரை மாநகராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் ஆறு, ஏழு மற்றும் எட்டு வகுப்புகளுக்கு அறிவியல் பாடத்தை கற்பிக்க அறிவியல் பட்டதாரி இல்லாத நடுநிலைப் பள்ளிகளுக்கு தற்காலிக ஏற்பாடாக அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து வாரத்திற்கு இருமுறை அறிவியல் பாடத்தை கற்பிக்க தகுதியுள்ள ஆசிரியர்களை மாணவர்களின் கல்வி நலன் கருதி மாற்றுப் பணியில் நியமிக்க வேண்டும் என்றும், மதுரை மாநகராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில், அருகிலுள்ள மதுரை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து தற்காலிக ஏற்பாடாக உடற்கல்வி ஆசிரியர்களை வாரத்திற்கு இருமுறை நடுநிலைப் பள்ளிகளுக்கு வருகை புரியும் வகையில் மாற்றுப் பணியில் ஏற்பாடுசெய்ய வேண்டும் என்றும், கடந்த தீபாவளி பண்டிகைக்கு முறையாக விழா முன்பனத்திற்கு விண்ணப்பித்தும் விழா முன் பணம் கிடைக்கப் பெறாத ஆசிரியர்களுக்கு, எதிர்வரும் பொங்கல் விழாவிற்காவது விழா முன் பணம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான காசோலைகளை மதுரை மாநகராட்சி அலுவலகம் சென்று பெற்று வருவதற்கு சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர்கள் பலமுறை அலைய வேண்டிய நிலை உள்ளதால் அதனை சரி செய்யும் வகையில் குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட பள்ளிகளுக்கு மதுரை மாநகராட்சி கல்வி அலுவலகம் மூலமாக ஓர் உதவியாளரை நியமித்து மின் கட்டணம் கட்டுவதற்கான காசோலைகளை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் என்றும், மதுரை மாநகராட்சி பள்ளிகளில் காவலர்கள் இல்லாத பள்ளிகளுக்கு பள்ளியின் பாதுகாப்பை கருதி காவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்

மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் 471 ஆசிரியர்களுக்கு 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவர்களது கணக்கில் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி தொகையானது நாளது தேதி வரை மாநில கணக்கயர் அலுவலகத்தில் உரிய விவரங்களுடன் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி தொகையையும் அதற்கான வட்டியையும் செலுத்தாத காரணத்தால், சம்பந்தப்பட்ட 471 ஆசிரியர்கள் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை செலுத்தப்பட்ட வருங்கால வைப்பு நிதி தொகையையும் சேர்த்து தற்காலிக முன்பணமோ, பகுதி இறுதி முன் பணமோ பெறுவதில், அத்தொகையையும்சேர்த்து பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு முன்பு வரை 471 ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட விவரங்களையும், அதற்கான வருங்கால வைப்பு நிதி தொகையையும், அரசு அனுமதித்த வட்டியுடன் விரைந்து மாநில கணக்காயர் அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் பற்றி மதுரை மாநகராட்சி கல்வி அலுவலர்களிடம் பேசி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கோரிக்கைகளை கேட்டு அறிந்த மதுரை மாநகராட்சி கல்வி அலுவலர் அவர்கள் அரசு விதிகளுக்கு உட்பட்டு விரைவாக கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துள்ளார்.

இந்நிகழ்வின் போது, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் எமிமாள் ஞானசெல்வி, சக்திவேல், சிவகுமார், ஜோசப் ஜெயசீலன் தோழமைச் சங்க நிர்வாகிகள் சந்திரன், கார்த்திகேயன், ராஜரத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு விசிட் செய்த MSME அகில இந்திய சேர்மன்.!

MSME அகில இந்திய சேர்மன் டாக்டர் முத்துராமன் மதுரை மாவட்டத்தில் உள்ள மல்லிகை பூவில் சென்ட் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES