
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியாற்றும் மின்வாரிய ஒப்பந்த பணியாளர்களின் பட்டியல் பெறப்பட்டது
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பல வருடங்களாக பணிபுரியும் அவர்கள் தங்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களின் வாயிலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்பொழுது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒப்பந்த பணியாளர்களின் பட்டியலை தயாரித்து வருகின்றனர். விரைவில் ஒப்பந்த பணியாளர்களின் பட்டியலை தமிழக அரசுக்கு வழங்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 120 பேர் அடங்கிய முதல் பட்டியலை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திருவண்ணாமலையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக ஒருங்கிணைப்பாளர்கள் ஏழுமலை மற்றும் பாலா (எ) பாலச்சந்தரிடம் ராணிப்பேட்டை தண்டபாணி வழங்கினார்.
இதை தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை இறுதிப்பட்டியல் பெறும் பணியை தொடங்கியுள்ளனர்.