
தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்டங்களிலும் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மதுரையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் மணிவாசகம், மதுரை மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிபவர்களின் பட்டியலை மதுரை காஜா பாயிடம் வழங்கினார்.
இந்நிகழ்வில் செந்தில், மலைச்சாமி, சுதாகர், பாண்டியன், ஆறுமுகராஜா, சுரேஷ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.