
மதுரையில் டிவிஎஸ் பள்ளியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு சங்கமத் திருவிழா பள்ளியின் முதல்வர் திருமதி அருணா குமாரி, துணை முதல்வர்கள் ஸ்டீபன், உஷா தேவி, ரேணுகா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
பள்ளியின் முன்னாள் மாணவர் பிரகாஷ் சவூக்கர் மேஜிக் ஷோ செய்து காட்டினார். சிறப்பு விருந்தினராக டி.வி.எஸ் சக்ரா நிர்வாக இயக்குனர் சீனிவாச வரதன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பாரம்பரியத்தை பின்பற்றும் வகையில் ஆரோக்கியமான உணவு வகைகள், விளையாட்டுகள், கைவினைப் பொருட்கள் விற்பனையகம், விதைப்பந்துகள் விற்பனை செய்யப்பட்டது.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்