Home/உலகம்/மதுரையில் இ.டி.இ.இ, அசெஞ்சர் மற்றும் பெட்கிராட் இணைந்து கைவினை பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மதுரையில் இ.டி.இ.இ, அசெஞ்சர் மற்றும் பெட்கிராட் இணைந்து கைவினை பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மதுரையில் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், இ.டி.இ.இ. அசெஞ்சர் மற்றும் பெட்கிராட் அமைப்பு இணைந்து கைவினை பொருட்கள் தயாரிப்பது குறித்து ஒருமாத பயிற்சி பெண்களுக்கு வழங்கப்பட்டு, அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி எஸ்.எஸ்.காலனியில் உள்ள “பெட்கிராட்” அலுவலகத்தில் நிர்வாக இயக்குனர் சுப்புராம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
செயலாளர் சாராள்ரூபி வரவேற்று பேசினார். நிகழ்ச்சிக்கு தலைவர் சுருளி,பொதுச் செயலாளர் அங்குசாமி, பொருளாளர் கிருஷ்ணவேணி, செயலாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட அலுவலர் கார்த்திகேயன் பாராட்டி பேசினார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வடக்கு தாசில்தார் தமிழ்ச்செல்வி சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் பெட்கிராட் துணைத் தலைவர் மார்ட்டின் நன்றியுரை கூறினார்.