
கொரோனா ஊரடங்கு காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சித்த மருத்துவருக்கு சோழன் மறுபிறவி தந்த மருத்துவச் செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கொரோனா தொற்று காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி நூற்றுக்கணக்கான நோயாளிகளை சித்த மருத்துவ ரீதியாகவும் உள ரீதியாகவும் குணமாக்கி மருத்துவம் என்பது இறையியலின் ஒரு பகுதி தான் என்பதை உணர்த்தும் வகையில் சேவையாற்றியதை பாராட்டும் வகையில் சிவகங்கை அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றி வரும் சித்த மருத்துவரான காந்திநாதன் அவர்களுக்கு சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் சார்பாக சோழன் மறுபிறவி தந்த மருத்துவச் செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த விருதை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன், தென்மண்டலத் தலைவர் முனைவர் சுந்தர், மதுரை மாவட்டத் தலைவர் சண்முகவேல், ஆயுஷ்யம் வர்ம சிகிச்சை மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஆர்த்தி மற்றும் மருத்துவர் பாலாஜி ஆகியோர் வழங்கிப் பாராட்டினார்கள்.