
பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி மதுரை மேற்கு மாவட்ட தலைவராக முத்துப்பாண்டி அவர்களை விவசாய அணி மாநில தலைவர் சி.கே நாகராஜன் நியமனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுடைய ஆலோசனையின் படியும், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாவட்ட தலைவர் சசிகுமார் அவர்களுடனான கலந்தாய்வின்படியும், முத்துப்பாண்டி அவர்களை மதுரை மேற்கு மாவட்ட விவசாய அணி தலைவராக நியமனம் செய்கிறேன்.அவர் பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட முத்துப்பாண்டி அவர்களுக்கு பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்