Thursday , March 23 2023
Breaking News
Home / உலகம் / திருச்சி அப்போலோ மருத்துவமனையில் குழந்தைகள் தின கொண்டாட்டம்.!
MyHoster

திருச்சி அப்போலோ மருத்துவமனையில் குழந்தைகள் தின கொண்டாட்டம்.!

குழந்தைகளுக்கும் மருத்துவ உரிமை அவசியம்
மருத்துவமனை அலங்கரிக்கப்பட்டு சிறப்புக் கொண்டாட்டம்
குஷியான விளையாட்டுகளுடன் ஆரோக்கிய விழிப்புணர்வு

திருச்சி, நவ 15:

குழந்தைகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், அவர்களின் கல்வி மற்றும் நல்வாழ்வுக்கான விழிப்புணர்வைப் பரப்பும் விதமாக நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த குழந்தைகள் தின நாளில் ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் மிகுந்த நம்பிக்கைக்குரிய மருத்துவ சேவை குழுமமான அப்போலோ, குழந்தைகளுக்கான மருத்துவ உரிமை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் உள்ள அப்போலோ குழுமத்தின் சில மருத்துவமனைகளில் சிறப்பு நிகழ்ச்சியை நடத்துகிறது.
இந்த நிகழ்ச்சியில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை, அப்போலோ குடும்பத்தின் உறுப்பினர்களாக ஏற்று, சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்ட பகுதிக்கு அவர்களை வரவழைத்து மகிழ்வித்தோம். அத்துடன் குழந்தைகள் மருத்துவர்கள், செவிலியர்கள் போல் உடையணிந்து மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களையும், உள் நோயாளிகளையும் சந்தித்து நலம் பெற வாழ்த்து தெரிவித்து புது அனுபவத்தை பெற்றனர். மேலும் குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கள்ளம் கபடமில்லா குழந்தைகளின் இயல்பான மகிழ்ச்சியும் சிரிப்பும் தான் நமக்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசு. உணவு உடை உறைவிடம் மற்றும் கல்வி ஆகிய அடிப்படை உரிமைகளுடன், சிறந்த சுகாதார வசதிகளும் கிடைக்க வேண்டியது அவசியம் என்று திருச்சி அப்போலோ மருத்துவமனையின் முதுநிலை பொதுமேலாளர் சாமுவேல் தெரிவித்தார்.
குழந்தைகள் தங்களின் உடல் நலத்தையும், குடும்பத்தினரின் உடல் நலத்தையும் பாதுகாத்திட ஊக்கப்படுத்தும் புதிய முயற்சியாக அவர்களின் ஆடைகளில் ஃப்யூச்சர் ஹீலர் என்ற வாசகம் பதித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும் குழந்தைகள் மருத்துவர்கள் திவ்யா, ஹிம பிந்து ஆகியோர் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதின் நன்மைகள், தடுப்பூசியின் முக்கியத்துவம், சமசீர் உணவு மற்றும் மனஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மருத்துவமனை மருத்துவ நிர்வாகி Dr. சிவம் மற்றும் பொது மேலாளர் சங்கீத் ஆகியோர் குழந்தைகள் தின நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். குழந்தைகள், பெற்றோர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

தமிழக மீனவர்கள் 12 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம்..!

தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கொழும்பு, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES