Thursday , March 23 2023
Breaking News
Home / உலகம் / பால் விலை உயர்வை கண்டித்து மதுரை கீரைத்துறையில் பாஜக மஹால் மண்டல் சார்பாக ஆர்ப்பாட்டம்.!!
MyHoster

பால் விலை உயர்வை கண்டித்து மதுரை கீரைத்துறையில் பாஜக மஹால் மண்டல் சார்பாக ஆர்ப்பாட்டம்.!!


தமிழகத்தில் பால் விலை உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அந்த வகையில் மதுரை கீரைத்துறை பகுதியில் பாஜக மஹால் மண்டல் தலைவர் ஐ.பாலமுருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக நகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன், மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேல் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

இந்நிகழ்விற்கு மாவட்டச் செயலாளரும், தெற்கு தொகுதி பொறுப்பாளருமான ஜனா ஸ்ரீ முருகன்,மாமன்ற உறுப்பினர் பூமா ஜனா ஸ்ரீ முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் பாரி ஜெயவேல், மண்டல் செயலாளர் ஆறுமுகம், வார்டு தலைவர் சதீஷ்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லப்பாண்டி, பி.கே கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

தமிழக மீனவர்கள் 12 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம்..!

தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கொழும்பு, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES