
இவ்விழாவிற்கு 12-வது வார்டு திமுக வட்டக் கழக செயலாளர் பி.எம்.மருது, வழக்கறிஞர் கார்த்தி, வண்ண மீன் பண்ணை உரிமையாளர் முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மேயர் இந்திராணி பொன்வசந்த் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் புவனேஸ்வரி சரவணன்,12-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராதா சந்திரன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியாளர்கள் கௌரவ தலைவர்கள் ராசு, மலைச்சாமி, தலைவர் செல்வம், செயலாளர் சபரி பாண்டியன், பொருளாளர் செல்லப்பாண்டி, துணைத் தலைவர் முருகன், துணைச் செயலாளர் வீரபுத்திரன், மற்றும் நிர்வாகிகள் சேகர், முத்துப்பாண்டி, ஸ்ரீராம், முத்து, குரு சிறப்பாக செய்திருந்தனர்.