Tuesday , December 6 2022
Breaking News
Home / உலகம் / மதுரையில் செடோய் அமைப்பு சார்பாக உறுதி மொழி ஏற்பு விழா.!!
MyHoster

மதுரையில் செடோய் அமைப்பு சார்பாக உறுதி மொழி ஏற்பு விழா.!!

மதுரையை தலையிடமாக கொண்டு செயல்படும் பிரபல செடோய் அமைப்பின் சார்பாக மதுரை மேரியாட் ஹோட்டலில் செடோய் மதுரையின் உறுப்பினர்களான தொழிலதிபர்கள் மக்களுக்கு சிறந்த வர்த்தக சேவையாற்ற உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்.பி தலைமை வகித்தார். செடோய் அமைப்பின் நிறுவனர் டாக்டர் எ.எஸ்.ரியாஸ், மதுரை மண்டல இயக்குனர் சி.கே.எம் செந்தில், தலைவர் அஸ்ரப் அலி, துணைத் தலைவர் முகமது இட்ரிஸ் மற்றும் செயலாளர் சரவண சுந்தரம் ஆகியோர் விழா ஏற்பாடுகளை முன்னின்று நடத்தி வைத்தனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பல்வேறு துறைகளை சேர்ந்த தொழிலதிபர்களும், தொழில் முனைவோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

வைகை நதி மக்கள் இயக்கம் சார்பாக மதுரை வைகை ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள் குறித்து ஆய்வு.!

வைகை ஆற்றில் வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் ஆற்றில் கொட்டும் கழிவுகள் குறித்து ஆய்வு நாள்.4.12.2022 ஞாயிற்றுக்கிழமை காலை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES