Thursday , December 1 2022
Breaking News
Home / உலகம் / மதுரை சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகரில் பாஜக பழங்குடியினர் அணி மாவட்ட தலைவர் எம்.கே.முருகன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!!
MyHoster

மதுரை சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகரில் பாஜக பழங்குடியினர் அணி மாவட்ட தலைவர் எம்.கே.முருகன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!!

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாஜக நிர்வாகிகள் இனிப்புகளை வழங்கியும், ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.

அந்த வகையில் மதுரை மாவட்டம் சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகரில் உள்ள ஸ்ரீ வனகாளியம்மன் மற்றும் ஸ்ரீ கொண்டையம்மன் கோவிலில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பெயரில் பழங்குடியினர் கலாச்சாரப்படி சிறப்பு வழிபாடு ,பாஜக பழங்குடியினர் அணி மாவட்ட தலைவர் எம்.கே.முருகன் தலைமையில் நடைபெற்றது.

மேலும் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் எஸ்.டி.அணி மாவட்ட துணைத்தலைவர் சின்னச்சாமி, மாவட்ட பொதுச்செயலாளர் முத்துக்கிருஷ்ணன்,மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின், மாநில துணைத்தலைவராக முனைவர் பிச்சைவேல் நியமனம்.!

வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின், மாநில துணைத்தலைவராக மதுரையை சேர்ந்த முனைவர் பிச்சைவேல் அவர்களை, வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES