
நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்து 30 வருடங்களுக்கு முன் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற “முதல் மரியாதை” திரைப்படம் டி.டி.எஸ் கியூப் வடிவில் வெளியிட உள்ளதை முன்னிட்டு அதன் டிரெய்லர் வெளியீடு மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை இத்திரைப்படத்தின் அகில உலக விநியோகஸ்தர் ராம.ஜெயக்குமார் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சிக்கு காந்தி சிலை பராமரிப்பு குழு தலைவர் தேனூர் சாமிகாளை தலைமை வகித்தார். அகில இந்திய சிவாஜி மன்ற செயலாளர் முருகவிலாஸ் நாகராஜன், பொன்ராம் மற்றும் சூர்யா மூவிஸ் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக திமுக பகுதி செயலாளர் பொன் வசந்த் மற்றும் மதிமுக பிரமுகர் சுருதிரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தினர்.
இந்நிகழ்வில் காங்கிரஸ் நகர் மாவட்ட துணைத்தலைவர் மலர்பாண்டியன்,திமுக பிரமுகர் குடை வீடு அருண்குமார், நேதாஜி சிலை பராமரிப்பு குழு தலைவர் சாமிநாதன், அமுதுராஜன், காங்கிரஸ் பகுதி தலைவர் பூக்கடை கண்ணன், மாரிக்கனி, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் வெங்கிடு, கௌதம் உள்பட சிவாஜி ரசிகர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பச்சைமணி, ஜோதிபாஸ்கர், சி.எஸ்.நாராயணன் ஆகியோர் செய்திருந்தனர்
மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்