Sunday , March 26 2023
Breaking News
Home / உலகம் / மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக பட்டிமன்ற நிகழ்ச்சி.!
MyHoster

மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக பட்டிமன்ற நிகழ்ச்சி.!

75 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக, இன்றைய இளைஞர்கள் எங்கே போகிறார்கள் திட்டமிட்ட பாதையிலா? திசை தெரியாமலா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

திட்டமிட்ட பாதையிலே என்ற தலைப்பில் போத்திராஜன், திருமலை முருகன், மாரிக்கண்ணன் ஆகியோரும், திசை தெரியாமலே என்ற தலைப்பில், கீதா பாபு, சினேகா, கவிஞர் துர்கா தேவி ஆகியோர் பேசினர்.

இந்நிகழ்ச்சிக்கு நடுவராக பங்கேற்ற டாக்டர் சண்முகம் திருக்குமரன், இளைஞர்கள் திட்டமிட்ட பாதையிலே தான் செல்கிறார்கள் என்ற தீர்ப்பை வழங்கினார்.

இந்நிகழ்வில் சபாராம் மருத்துவமனை டாக்டர் பாலசுப்ரமணியன்,தொழிலதிபர் பழனிவேல், திரைப்பட இயக்குனர் ரத்தினசாமி, முருகேசன், திருஞானசம்பந்தம்,போஸ் உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் டிரஸ்ட் அறங்காவலர் சோலை எஸ்.பரமன் நன்றியுரை கூறினார்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

ஏலே நீ ஒரு ஆர்டிஸ்ட்னு நிரூபிச்சுட்ட…! ஒரே நேரத்தில் அம்மா, பாட்டி, மகள், மாமியார் கர்ப்பம்…?

கேரள ஜோடி நடத்தியுள்ள இந்த போட்டோஷூட் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் செம்ம டிரெண்டிங்கில் உள்ளது. கேரளாவில் ஜோடி ஒன்று நடத்தியுள்ள …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES