Friday , March 29 2024
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் செப்டம்பர் 28 முதல் 30-ஆம் தேதி வரை 3-நாள் மோடி கபடி லீக் போட்டி.!
MyHoster

மதுரையில் செப்டம்பர் 28 முதல் 30-ஆம் தேதி வரை 3-நாள் மோடி கபடி லீக் போட்டி.!

மோடி கபடி லீக் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையும், மதுரையில் மூன்று நாட்கள் நடைபெற உள்ளதாகவும் பாஜக இளைஞர் மேம்பாட்டு மற்றும் விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி மற்றும் மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் ஆகியோர் தெரிவித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கூறுகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கபடி லீக் சார்பாக செப்டம்பர் 17ஆம் தேதி ஆரம்பித்து 30 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடக்க உள்ளது.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுரா கல்லூரி மைதானத்தில் செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை மூன்று நாள் கபடி போட்டி நடக்க உள்ளது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக மூன்று மத்திய அமைச்சர்கள், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 15 லட்சம், இரண்டாவது பரிசாக 10 லட்சம், மூன்றாவது பரிசாக இரண்டு பேருக்கு தலா 5 லட்சம் வழங்க உள்ளோம் எனக் கூறினார்.

இந்த பேட்டியின் போது மாவட்டத் துணைத் தலைவர்கள் ஜெயவேல், சத்தியம் செந்தில்குமார், பழனிவேல், இளைஞர் மேம்பாட்டு மற்றும் விளையாட்டு பிரிவு மாவட்டத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் வினோத்குமார், ஜோதிமணி வண்ணன், பாலமுருகன், இளைஞரணி மாவட்ட தலைவர் டாக்டர் கோகுல் அஜித், வர்த்தக பிரிவு மாவட்டத் தலைவர் வடமலையான், மீனவரணி மாவட்ட தலைவர் இளங்கோ, ஊடக பிரிவு மாவட்டத் தலைவர் சங்கர்லால், மகளிரணி மாவட்ட தலைவி ஓம்சக்தி.தனலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் பாரி ஜெயவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லப்பாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பெண்களால் நடத்தப்பட்டு வரும் திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சிலம்பு பயிற்சி பள்ளி மாணவிகளுக்கும் டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளிக்கும் குவிந்து வரும் பாராட்டு..!

பெண்களால் நடத்தப்பட்டு வரும் திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சிலம்பு பயிற்சி பள்ளி மாணவிகளுக்கும் டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளிக்கும் பாராட்டுக்கள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES