Friday , May 20 2022
Breaking News
Home / உலகம் / அசானி புயல் சின்னம் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 17 உள்நாட்டு விமான சேவை ரத்து..
Vsolve UK

அசானி புயல் சின்னம் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 17 உள்நாட்டு விமான சேவை ரத்து..

அசானி புயல் சின்னம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 17 உள்நாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டன. மேலும் சென்னையில் இருந்து அந்தமானுக்குவிமானங்கள் தாமதம் காலதாமதமாக புறப்பட்டு சென்றன.

வங்க கடலில் உருவாகி உள்ள ‘அசானி’ புயல் ஆந்திரா-ஒடிசா மாநிலங்களை மிரட்டிக்கொண்டிருக்கிறது. அதோடு தமிழகத்திலும் பரவலாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை முதல் லேசான மழை வரை பெய்தது. இந்த நிலையில், 2-வது நாளாக நேற்று சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் செல்ல வேண்டிய 3 விமானங்களும், விஜயவாடா செல்ல வேண்டிய 2 விமானங்களும் ராஜமுந்திரி செல்ல வேண்டிய ஒரு விமானமும் ரத்து செய்யப்பட்டன. 

அதேபோல் விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரி ஆகிய நகரங்களில் இருந்து சென்னை வர வேண்டிய 6 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும், பெங்களூரு, ஜெய்ப்பூர், கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கான 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டது.

மேலும் சென்னையில் இருந்து அந்தமானுக்கு காலை 8.15 மணிக்கு செல்ல வேண்டிய விமானம் 11.30 மணிக்கும், காலை 8.30 மணிக்கும் செல்ல வேண்டிய விமானம் பகல் 1.30 மணிக்கும் காலதாமதமாக புறப்பட்டு சென்றன.

THANKS TO : DAILY THANTHI

Bala Trust

About Aruna Manoharan

Check Also

சாலையோரம் தோன்றிய லிங்கம்.. குவிந்த பக்தர்கள்.. அமெரிக்காவை உலுக்கிய சம்பவம்! கடைசியில்தான் ட்விஸ்ட்

நியூயார்க்: ஞானவாபி மசூதி லிங்க விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில்தான் அமெரிக்காவில் இதேபோல் லிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES