Friday , May 20 2022
Breaking News
Home / உலகம் / கொரோனா தொற்றுக்கு எதிராக தாவர தடுப்பூசி கண்டுபிடிப்பு – கனடா ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்..
Vsolve UK

கொரோனா தொற்றுக்கு எதிராக தாவர தடுப்பூசி கண்டுபிடிப்பு – கனடா ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்..

கனடாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக தாவர அடிப்படையிலான தடுப்பூசி கண்டுபிடித்து ஆராய்ச்சியாளர்கள் அசத்தி உள்ளனர்.

கனடா நாட்டில் மெடிகாகோ என்ற பெயரில் உயிரிதொழில் நுட்ப நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இதன் ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களை அடிப்படையாகக் கொண்டு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கி அசத்தி உள்ளனர். இந்த தடுப்பூசிகள் சிறப்பாக செயல்பட அவற்றுடன் ‘ஏஎஸ் 03’ என்ற பொருள் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களை அடிப்படையாகக் கொண்டு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கி அசத்தி உள்ளனர். இந்த தடுப்பூசிகள் சிறப்பாக செயல்பட அவற்றுடன் ‘ஏஎஸ் 03’ என்ற பொருள் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியின் 3-வது கட்ட சோதனை 85 மையங்களில் 24 ஆயிரத்து 141 பேரிடம் நடத்தப்பட்டது. இவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை நடத்தப்பட்டதில் 165 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.


ஆனால் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எவருக்கும் தீவிரமான கொரோனா தொற்று ஏற்படவில்லை.

இந்த பரிசோதனையில் தடுப்பூசி, 5 வகை உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக 69.5 சதவீத செயல் திறன் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது அறிகுறிகளுடன் கூடிய கொரோனாவுக்கு எதிரானதாகும்.

மிதமான கொரோனாவுக்கு எதிராக 78.8, சதவீதமும், கடுமையான கொரோனாவுக்கு எதிராக 74 சதவீதமும் செயல்திறன் உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த தடுப்பூசி பற்றிய ஆய்வுத்தகவல்கள் ‘நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசின்’ பத்திரிகையில் வெளியாகி உள்ளன.

Bala Trust

About Aruna Manoharan

Check Also

சாலையோரம் தோன்றிய லிங்கம்.. குவிந்த பக்தர்கள்.. அமெரிக்காவை உலுக்கிய சம்பவம்! கடைசியில்தான் ட்விஸ்ட்

நியூயார்க்: ஞானவாபி மசூதி லிங்க விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில்தான் அமெரிக்காவில் இதேபோல் லிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES