Friday , May 20 2022
Breaking News
Home / உலகம் / டான் நிகழ்ச்சியில் சமுத்திரக்கனின் நெஞ்சை உருக்கும் பேச்சு !!!
Vsolve UK

டான் நிகழ்ச்சியில் சமுத்திரக்கனின் நெஞ்சை உருக்கும் பேச்சு !!!

சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி உள்ளது. இந்த டிரைலரில் சிவகார்த்திகேயன் காமெடி காட்சிகள் ரொமான்ஸ் காட்சிகள் சண்டை காட்சிகள் அதிகமாக உள்ளன என்பதும் இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உள்ளது.

முன்னதாக டிரைலர் மற்றும் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது பேசிய படத்தின் விநியோகஸ்தரரான உதயநிதி ஸ்டாலின் “சினிமாவில் இப்போது ரெண்டு டான் இருக்காங்க… ஒன்னு சிவகார்த்திகேயன். இன்னொன்னு அனிருத்” எனப் பேசியுள்ளார்.

படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள சமுத்திரக்கனி “இந்த திரைப்படத்தில் பல காட்சிகள் என்னை உணர்ச்சிவசப்பட வைத்தது. கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய பல காட்சிகள் இருந்தன, என்னால் அதைச் செய்ய முடியவில்லை. சிபி ஸ்கிரிப்டை சொன்ன போது, அது என் வாழ்க்கையை மீட்டெடுத்தது போல் இருந்தது. சிபி இப்படம் மூலம் பெரிய உயரத்தை எட்டப் போகிறார், மேலும் பார்வையாளர்களுக்கு இந்த திரைப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் படத்தின் மூலம் என் அப்பா எனக்குள் நுழைந்தது போல் இருந்தது. டான் ஒரு பிளாக்பஸ்டராக இருக்கும், மேலும் சிவகார்த்திகேயன் இந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத ஹீரோவாக இருப்பார். இப்படத்தில் ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். அனிருத் நாடு முழுவதும் அறிந்த ஒரு சிறந்த இசையமைப்பாளராகிவிட்டார். பிரியங்கா பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போலவே இருக்கிறார், அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. சிவகார்த்திகேயன் இன்னும் உயரத்திற்கு செல்ல அனைத்து ரசிகர்களும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.” எனப் பேசினார்.

Bala Trust

About Aruna Manoharan

Check Also

சாலையோரம் தோன்றிய லிங்கம்.. குவிந்த பக்தர்கள்.. அமெரிக்காவை உலுக்கிய சம்பவம்! கடைசியில்தான் ட்விஸ்ட்

நியூயார்க்: ஞானவாபி மசூதி லிங்க விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில்தான் அமெரிக்காவில் இதேபோல் லிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES