யார் இந்த ப.சி ??
யார் இந்த ப.சிதம்பரம் சுவார் ஏறி குதித்து சி.பி.ஐ கைது செய்தது ஏன்?
தமிழ்நாட்டுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை கொடுத்த ராஜா சர். அண்ணாமலை செட்டியாரின் பேரன் ப.சிதம்பரம் தற்போது சி.பி.ஐயின் பிடியில் – இந்தியாவின் புகழ்பெற்ற ஒரு பொருளாதார வல்லுநர் சிக்கியது ஏன் !!
ப.சிதம்பரம் தமிழ்நாட்டில் இருந்து வந்து டெல்லியின் அதிகாரத்தில் மிகப்பெரிய உயரத்தை அடைந்தவர் சிதம்பரம் .2009 முதல் 2014 வரை இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அரசில் இடம்பெற்று இருந்த ஒன்பது அமைச்சரவை குழுக்களிலும் இடம்பெற்று இருந்தார்.சிதம்பரம் அந்த அரசு மிகப்பெரிய கொள்கை முடிவுகள் எடுப்பதை தீர்மானிப்பது இந்த குழுக்கள் தான் .அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் -க்கு அடுத்த படியாக அதிக அதிகாரத்துடன் ஆட்சியில் இருந்தவர் சிதம்பரம். இவர்(1945) செப்டம்பர் மாதம் 16-ம் தேதி தமிழகத்தில் உள்ள சிவகங்கை மாவட்டம் காநாடு காத்தானில் பிறந்தவர் ஆவார்.தமிழகத்தின் கல்வி,இசை,வனிக வரலாற்றின் அழியாத முத்திரை பதித்த நெருங்க முடியாத ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் மகள் வழி பேரன் இவர் தாயார் லெட்சுமி ஆட்சி அண்ணாமலை செட்டியாரின் மகள் ப.சி- யின் தந்தை பெயர் பழனிப்பன் .ப.சி -சென்னையில் பெரும் கல்லூரிகளாக திகழும் அனைத்திலும் பயின்றார். தொழில்முறை வழக்குரைஞர் அமெரிக்காவில் உள்ள ஹார்டுவேர்ட் பல்கலைக்கழகத்தில் MBA பயின்றார்..இந்தியாவில் உள்ள உயர்நீதி மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் வழக்கறிஞர் ஆக பணியாற்றிவர்.இவர் மனைவி நலினியும் வழக்கறிஞர்.இவர் மகன் கார்த்திக் தற்போது சிவகங்கை தொகுதியின் மக்களவை உறுப்பினராக உள்ளார்.ப.சி தற்போது மாநிலங்களவை உறுப்பினர்..இதற்கு முன் ஏழு முறை M.P ஆக இருந்திருக்கிறார்…1972 -ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய உறுப்பினராக இருந்திருக்கிறார்..பிறகு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவாரக மூன்று ஆண்டுகள் பதவி வகித்தார்
.1984 முதல் முறையாக மக்களவைக்கு உறுப்பினராக தேர்ந்த்தெடுக்கப்பட்டார்.1985ல் ராஜிவ்காந்தி பிரதமாரக இருந்த போது மத்திய வனிகவரி துறை துணை அமைச்சராக இருந்தார் இது தான் இவரின் முதல்படி பிறகு பணியாளர் நலன், நிர்வாக சீர்திருத்தம்,மக்கள் குறைத்தீர்ப்பு போன்ற துறைகளில் துறை மாற்றம் அடைந்தார்.காங்கிரசுக்கு எதிராக நின்ற தேவுகடா தலைமையில் அமைந்த ஐக்கிய முன்னணி அரசில் கேபினட் அமைச்சராக முதன் முதலில் பதவி பெற்றார்.இவர் தற்போது காங்கிரசின் பரம்பரையாக இருக்கிறார்.ராஜிவ்காந்தி கொல்லப்பட்ட போது நாடாளுமன்றத்திருக்கும்,தமிழக சட்டமன்றத்திற்கும் ஒரு சேர தேர்தல் நடைபெற்றது.அப்போது தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வர் ஆனார்.அப்போது மத்தியில் பிவி நரசிம்மராவ் பிரதமர் ஆனர்.தமிழகத்தில் காங்கிரசையை ஜெயலலிதா அரசு அவமதிப்பு செய்கிறது என்று அக்கட்சிக்குள் குமறால் ஏற்பட்டது.1991 முதல்1996 வரை உள்ள அதிமுக ஆட்சி மக்களிடத்தில் பெரும் அதிருப்தியை பெற்று இருந்தது.இந்த சம்பவத்திற்கு பிறகு 1996 பின் நடந்த தேர்தலில் இருந்து அதிமுக கூட்டணி விலக வேண்டும் என்று செல்வாக்கு மிக்க தலைவரான ஜி.மூப்பனார் பிரிந்து தமிழ்மாநில காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார்.அப்போது காங்கிரஸ் ல் இருந்து பெரும் அளவு மக்கள் மூப்பனார் தலைமைக்கு வந்தனர் .தமிழ் மாநில காங்கிரஸ் திமுக வுடன் கூட்டணி வைத்தது.அந்த கட்சியில் மூப்பனார் க்கு அடுத்தபடியாக இருந்தவர் ப.சிதம்பரம் இது தான் திருப்புமுனையாக அமைந்தது இவருக்கு அந்த அணி மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று தேவுகடாதலைமை யில் அமைந்த அணி காங்கிரஸ் ,பிஜேபிக்கு மாற்றாக மூன்றாவது அணியாக திகழ்ந்து ,தேவுகடா தலைமை மத்தியில் ஆட்சியை அமைத்தது.அப்போது தான் ப.சி முதல் முறையாக நிதி துறை கேபினட் அமைச்சராக பதவி வகித்தார்.அப்போது தமிழ்மாநில காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணி வைத்த போது வெறுப்புடன் அக்கட்ட்சியில் இருந்து வெளியேறினார் ப.சி. பிறகு காங்கிரஸ் ஜனநாயக பேரவை என்ற கட்சியை தொடங்கினர்.2004 மக்களவை தேர்தலில் இந்த கட்சியின் மூலம் திமுகவுடன் கூட்டணி வைத்து M.P ஆனார்.அப்போது காங்கிரஸ் தலைமையிலான அரசு மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த போது அப்போது நிதித்துறை அமைச்சராக பதிவு வகித்தார்..ஐக்கிய முற்போக்கு கூட்டணி தொடர்ந்து பத்து ஆண்டுகள் நீடித்தது .அந்த பத்தாண்டுகளில் அமைச்சரவையில் தொடர்ந்து பணியாற்றினார் இதில் முக்கிய துறையான உள்துறையும் உண்டு .ப.சி இந்த பத்தாண்டுகளில் தான் அவர் அரசியல் வாழ்வு உச்ச கட்டம் அடைந்தது.இந்த பத்தாண்டுகள் காலம் தான் அவர் சர்ச்சைகளின் உற்றுகண்ணாக விளங்கியது..
சிதம்பரமும் வழக்கும் !!!!
2006ம் ஆண்டு மார்ச் மாதம் மொரீசியஸ் ல் இருந்து இயங்கும் மெக்சிஸ் நிறுவனத்தின் துனை நிறுவனமான குளோபல் கம்யூனிகேஷன் நிறுவனம் ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு சிதம்பரம் நிதி அமைச்சராக இருக்கும் போது வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்தது.ஆனால் சிதம்பரம் வெளிநாட்டு மேம்பாட்டு க்கு 600 கோடி வரை மட்டும் தான் அனுமதி அளிக்க முடியும் .அதற்கு மேல் வரும்போது அதை பொருளாதார மேம்பாட்டு குழுக்கு அனுப்பி பரிசீலிக்க வேண்டும் .இந்த மெக்சிஸ் ஏர்செல் நிறுவனம் 3200 கொடிவரை முதலீடு செய்திருந்தாலும் ஆனால் இந்த தொகையை சிதம்பரம் அனுமதி அளித்ததாகவும் அதன் மூலம் அவர் மகன் கார்த்திக் சம்பந்தமான நிறுவனங்களும் பலன் அடைந்ததாகவும் தான் சிபிஐ வைக்கும் குற்றச்சாட்டு !!!
ஒரு பங்கின் முகமதிப்பு 10 ரூபாய் என்றால் ஏர்செல் நிறுவனித்தின் பங்கு மதிப்பீடு 180 கோடி ஆகும் இதன் அடிப்படையில் பிரிமியம் விலையில் விற்று சேர்ந்ததால் மொத்தமாக வந்து சேர்ந்த மூலதனத்தின் பங்கின் மதிப்பீடு 3200 கோடி என்பது தான் சிபிஐயின் வாதாமாக இருக்கிறது. ஆனால் சிதம்பரம் மற்றும் கார்த்திக் இதை மறுக்கின்றனர்.2007 ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த போது ஐ என்க்ஸ் மீடியா வெளிநாட்டில் இருந்து 305 கோடி ரூபாய் முதலீடு செயத்தற்கு வெளிநாட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக 2017 ஆண்டு சிபிஐ ஒரு வழக்கு தொடர்ந்து.அவர் மகன் கார்த்திக் முதலீடு செய்த நிறுவணத்தினை நேரடியாவோ மறைமுகவோ மிரட்டி தன் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாக அமலக்கத்துறையும் வதியிடுகிறது..சிறந்த மேடை பேச்சாளர் ,வழக்குரைஞர், நிர்வாகி,பொருளாதார வல்லுநர் ,என பல முகங்கள் உடையவர் ப.சிதம்பரம் இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்தத்தில் இருந்து இவர் வழக்குகளில் வேகம் காட்ட தொடங்கியுள்ளது. இந்த வழக்குகளின் போக்கு சிதம்பர்த்தின் அரசியல் வாழ்வை தீர்மானிக்கும் …..
செய்தியாளர் : நா.யாசர் அரபாத்