Friday , May 20 2022
Breaking News
Home / கல்வி / பள்ளி இலவச இடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..
Vsolve UK

பள்ளி இலவச இடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..

அனைவருக்கும் கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில் உள்ள, 1.34 லட்சம் இடங்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் குழந்தைகளுக்கான, 25 சதவீத ஒதுக்கீடு இடங்களுக்கு, ஜூலை 5-ஆம் தேதி முதல் , ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தி்ல் 3696 மெட்ரிக்குலேசன் பள்ளிகள் உள்ளிட்ட, நர்சரி, பிரைமரி பள்ளிகளையும் சேர்த்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன.  இவற்றில் உள்ள 1,34,400 இடங்கள் நிரப்பப் பட உள்ளன. இந்த இடங்களின் விவரங்களை தனியார் பள்ளிகள் அறிவிப்பு பலகையிலும், பள்ளிக்கல்வித்துறையின் இணையதளத்திலும் ஜூலை 3 ந் தேதி வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மாணவர்களின் பெற்றோர் https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும்,  விண்ணப்பம் செய்யும் மாணவர்களின் இருப்பிடம், பள்ளியிலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திற்குள் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.  விண்ணப்பிக்கும் பெற்றோர்கள் மாணவரின் புகைப்படம், பிறப்பு சான்றிதழ், ஆதார் அல்லது குடும்ப அட்டை, வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஜூலை 5-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Thanks to : news 18

Bala Trust

About Ramya Karur

Check Also

திமுக ஆட்சி ஓர் ஆண்டு நிறைவு முழுமையற்றதா ? வெற்றிகரமானதா ?

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்து இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவுக்கு வருகிறது. இந்த ஓர் ஆண்டில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES