Wednesday , June 7 2023
Breaking News
Home / தமிழகம் / இன்று சென்னையில் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக இல்லாத குடும்பங்களுக்கு இயன்றதை நிவாரண பொருட்கள் வழியாக செய்த இளைஞர்கள்…
MyHoster

இன்று சென்னையில் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக இல்லாத குடும்பங்களுக்கு இயன்றதை நிவாரண பொருட்கள் வழியாக செய்த இளைஞர்கள்…

சென்னை: விருகம்பாக்கம் மின்மயானம் (பெரிய சுடுகாடு) எதிரில் உள்ள 60க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தினக்கூலி குடும்பங்களுக்கு சுமார் 1500 மதிப்புள்ள நிவாரண பொருட்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக கொடுக்கபட்டது. இந்தப் பகுதி சென்னை மதுரவாயல் 148 வட்டத்துக்குபட்டது.

பண உதவி செய்த நண்பர்கள் பொன்னம்பலம், பாஷா, ராஜேஷ் மற்றும் மூர்த்தி அவர்களுக்கு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாநில துணைச்செயலாளர் திரு. சண்முகம் அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

மேலும் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட துணைத்தலைவர் திரு. சந்தோஷ் அவர்களும் மதுரவாயல் தொகுதி ஐடி விங் தலைவர் திரு.லிங்கம் அவர்களும் உடன் இருந்தனர்.

எந்த சூழ்நிலையிலும் இளைஞர்கள் கைகொடுப்பார்கள் என்று எண்ணித்தான் பேரிடர் காலங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன என்னவோ தெரியவில்லை…

ஆனால் எல்லா பேரிடர் காலத்திலும் இளைஞர்களின் ஆட்சி மேலோங்குவது மக்கள் அனைவருக்கும் தெரிந்ததே…

அதுபோல இளைஞர்கள் ஆட்சிக்கு வந்தால் இதுபோன்று பன்மடங்கு செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இளைஞர்களுக்கு இளைஞர் குரல் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Bala Trust

About Admin

Check Also

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சமூக ஊடகத்துறை நிர்வாகிகள் நியமனம்…

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சமூக ஊடகத்துறை நிர்வாகிகள் நியமனம் மற்றும் ஆலோசனை கூட்டம் மாநகர் தலைவர் தமிழரசன் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES