Thursday , March 23 2023
Breaking News
Home / இந்தியா / ச்சும்மா கிழி.. டாப் கியரில் தமிழகம்.. கொரோனாவை சூப்பராக கையாளும் முதல்வர்.. கலக்கும் விஜயபாஸ்கர்!
MyHoster

ச்சும்மா கிழி.. டாப் கியரில் தமிழகம்.. கொரோனாவை சூப்பராக கையாளும் முதல்வர்.. கலக்கும் விஜயபாஸ்கர்!

ச்சும்மா கிழி.. டாப் கியரில் தமிழகம்.. கொரோனாவை சூப்பராக கையாளும் முதல்வர்.. கலக்கும் விஜயபாஸ்கர்!

சென்னை: சும்மா சொல்லக் கூடாது.. கொரோனாவால் தங்களது மாநில மக்கள் பாதித்துவிடக்கூடாது என்பதில் அளவுக்கு அதிகமான அக்கறையை காட்டி வருகின்றனர் பெரும்பாலான முதலமைச்சர்கள்!!

நம் நாட்டின், பொது சுகாதார வசதிகளில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன.. ஆனாலும் போலியோ ஒழிப்பு, பறவை காய்ச்சல் தொற்று, சமீபத்திய வந்த நிபா வைரஸ் தாக்குதல் ஆகியவற்றை இந்தியா எதிர்கொண்டு, சமாளித்துள்ளது. ஆனால் அதுபோல், கொரோனாவையும் எதிர்கொள்ள முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

இந்த கோரதாண்டவம் ஆடும் கொரோனாவின் பிடியில் சிக்காமல் தப்புவதுதான் ஆகச்சிறந்த புத்திசாலித்தனம் என்பதை மத்திய-மாநில அரசுகள் உணர்ந்துள்ளன.. கொரோனா தொற்றில் இருந்து மக்களை தப்புவிக்க இந்தியாவின் மாநில முதல்வர்கள் மெனக்கெடுவதை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது நம் முதல்வரையும், பினராயி விஜயனையும்தான்.. கேரளாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ரூ. 20 ஆயிரம் கோடிக்கு சலுகை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது… ஒரு மாதத்திற்கு இலவச ரே‌ஷன், சலுகை விலையில் மதிய உணவு… மின்சாரம், குடிநீர் கட்டணத்தை அபராதம் இல்லாமல் கட்ட ஒரு மாத காலம் அவகாசம் சினிமா தியேட்டர்களுக்கான கேளிக்கை வரி சலுகை… என லிஸ்ட் பெரிதாகி கொண்டே வருகிறது..

முக்கியமாக ஒன்றை சொல்லியே ஆக வேண்டும்.. அங்கன்வாடி நிலையங்களையும் மூடும் சூழல் ஏற்பட்டது.. ஆனால், அங்கன்வாடிகளை சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் இந்த மதிய உணவு திட்டங்களை நம்பிதான் உள்ளனர்… அதனால், மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மாணவர்களுக்கு மதிய உணவை அவர்களது வீட்டுக்கே சென்று கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.. அதன்படியே கிளாஸ் டீச்சர்கள் டிபன் பாக்ஸ்களில் குழந்தைகளுக்கு சாப்பாடு எடுத்து கொண்டு போய் கொடுக்கும் உச்சக்கட்ட நெகிழ்வும் இந்த மாநிலத்தில் நடந்து வருகிறது. அதனால்தான் மற்ற மாநிலங்களுக்கு மட்டுமல்ல, அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் பினராயின் செயல்பாடுகள் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல நம் முதல்வரை எடுத்து கொண்டால், “வெல்டன்” என்று ஒரு வார்த்தையைதான் சொல்ல தோன்றுகிறது.. துரிதமாக நடவடிக்கைகள் எடுக்கிறார்… எல்லாவற்றையும் முன்னின்று பார்வையிடுகிறார்… அதிகாரிகளை முடுக்கி விடுகிறார்… 144 தடையை கொண்டு வந்துவிட்டார்.. 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை ஆல் பாஸ் என்றார்.. டீ கடையை இழுத்து மூட சொல்லிவிட்டார். எல்லைகளை மூட சொன்னார்… ஒவ்வொரு செயல்பாடுகளையும் பிரதமர் கவனித்துதான் வந்திருக்கிறார்.

அதனால்தான் மாநில முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி தமிழக அரசின் செயல்பாடுகளை வெகுவாகவே பாராட்டி இருக்கிறார். டாக்டர்களுக்கு ஒரு மாத ஊதியம், ஏப்ரல் மாதம் எல்லாருக்கும் ரேசன் பொருட்கள் இலவசம் என்று அடுக்கடுக்கான அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகமும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் நம்பிக்கையை மட்டும் நமக்கு தந்து கொண்டிருக்காமல் இருந்தால், தமிழகம் பலவீனமாகவே இருக்கும்.. பாதிப்புகளை முன்கூட்டியே ஊகித்து ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக செயல்பட்டு வருகிறார்கள்.. இதில் விஜயபாஸ்கரின் டியூட்டி கொஞ்சம் ஓவர் டைம் ஆகவே உள்ளது.
என்னே மனுஷன் இவர்!?? திடீரென ராத்திரி 1 மணிக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆய்வுக்கு ஓடுகிறார்.. ஏர்போர்ட்டில் பார்வையிடுகிறார்.. பேட்டி தருகிறார்.. கொரோனா குறித்த நிகழ்வுகளை உடனுக்குடன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகிறார்.. கிடைத்ததை சாப்பிடுகிறார்.. கிடைத்த நேரத்தில் தூங்குகிறார்.. ஒட்டுமொத்த மருத்துவர்களும் சோர்வாகி விடாமல் அவர்களை ஊக்க வரிகள் தந்து கவிதை எழுதி கண்ணீருடன் பாராட்டுகிறார்.. அதனால்தான் இந்தியாவிலேயே மிகக் குறைந்த அளவிலான நோயாளிகள் உள்ள மாநிலங்களில் தமிழகமும் முக்கிய இடத்தில் உள்ளது.
அதேபோல தெலுங்கானா முதல்வர் கேசிஆரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். வடக்கில் பார்த்தால் பஞ்சாப் மாநில அரசு சிறப்பாக செயல்படுகிறது. இதேபோல டெல்லி மாநில அரசும் தன் நடவடிக்கைகளை குறை சொல்லாமல் நடத்தி வருகிறது.. ஆனால் மற்ற மாநிலங்களில் பெரும்பாலான மாநில அரசுகளின் செயல்பாடுகள் கவலைக்குரியதாக இருந்தாலும், இதில் டாப் கியர் போட்டு மேல சென்றுள்ளது பினராயி & நம்ம எடப்பாடியார்தான்!!.. இவர்கள் படும் பாடும் தமிழக மக்கள் தரும் ஒத்துழைப்பும் சேர்ந்து கொரோனாவைரஸை ஓட ஓட விரட்டினால் நல்லாருக்கும்.. நல்லதே நடக்கும்.. காத்திருப்போம்!!

Bala Trust

About Admin

Check Also

அரவக்குறிச்சியின் ஆரோக்கியம் வழக்கறிஞர் பஜ்லுள் ஹக்…

*அரவக்குறிச்சியின் ஆரோக்கியம் வழக்கறிஞர் பஜ்லுள் ஹக்* நான் கண்டு வியந்தவர்களில் அவரும் ஒருவர். 20 ஆண்டுகளுக்கு முன் பார்த்த அதே …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES