சேலம் கோட்டை மார்க்கெட் தெரு அப்சரா இறக்கம் 31 ஆவது வார்டு தார் சாலைகள் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு இளைஞர் கட்சியைச் சேர்ந்த குமரவேல் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு நீதி நாளான இன்று விண்ணப்பம் கொடுத்துள்ளார். சுமார் ஒரு வருட காலம் பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடர்ந்து கொண்டே இருப்பதால் அந்தப்பகுதி எந்த நேரமும் புளிதியோடு காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் சுவாசிக்க சிரமப்படுகின்றனர், ஆகையால் உடனடியாக தார்சாலை அமைக்குமாறு தாழ்மையுடன் தமிழ்நாடு இளைஞர் கட்சி யினர் கேட்டுக் கொண்டனர். மேலும் அவர்கள் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவதாக தெரிவித்தார்கள்.
Check Also
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நீர் மோர் பந்தல்…
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நீர் மோர் பந்தல் மே 1 முதல் மே …