இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடாதவாறு தடுத்ததால் காங்கிரஸ் கட்சியினர் ரயில் நிலையம் வாசல் முன்பு நின்று ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை முழக்கமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட வந்த காங்கிரஸ் கட்சியினரை கரூர் போலீசார் ரயில் நிலையம் முன்பே அவர்களை மறித்து கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.










