Saturday , June 3 2023
Breaking News
Home / தமிழகம் / திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்காணிக்கை நகைகளை உருக்குவதற்காகபிற உலோகத்தை பிரித்தெடுக்கும் பணி
MyHoster

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்காணிக்கை நகைகளை உருக்குவதற்காகபிற உலோகத்தை பிரித்தெடுக்கும் பணி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காணிக்கை நகைகளை உருக்குவதற்காக பிற உலோகத்தை பிரித்தெடுக்கும் பணி தொடங்கியது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகளை உருக்குவதற்கு வசதியாக பிற உலோகங்களை பிரித்தெடுக்கும் பணி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தொடங்கியது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் உபயமாகவும், உண்டியல் காணிக்கையாகவும் செலுத்திய தங்க நகைகள் பயன்பாடற்று இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவுப்படி, இதை உருக்கி சுத்த தங்க கட்டிகளாக மாற்றி முதலீடு செய்யப்பட உள்ளது. இதற்கு வசதியாக தங்க நகைகளில் உள்ள அரக்கு, அழுக்கு மற்றும் கற்கள் உள்பட பிற உலோகங்களை பிரித்தெடுக்கும் பணி நடக்கிறது.

இந்த பணியானது கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி மாலா தலைமையில் தொடங்கியது.

இதில், இணை ஆணையர் கார்த்திக், தூத்துக்குடி மண்டல துணை ஆணையரும், நகை சரிபார்ப்பு அலுவலருமான வெங்கடேசன், நகை சரிபார்க்கும் வல்லுனர் குழுவினர் தங்க நகைகளை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இப்பணி இன்னும் சில நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி நிறைவடைந்த பின்னர் தான் நகைகள் இருப்பு எவ்வளவு உள்ளது? என்பது தெரியவரும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.

Bala Trust

About Admin

Check Also

இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்நாடு கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறை, SKM லைப் கேர் இரத்தப் பரிசோதனை நிலையம், பாலா அறக்கட்டளை, வெள்ளியணை ஊராட்சி, அரசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்நாடு கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறை, SKM லைப் கேர் இரத்தப் பரிசோதனை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES