Saturday , June 3 2023
Breaking News
Home / கரூர் / அரவக்குறிச்சியின் ஆரோக்கியம் வழக்கறிஞர் பஜ்லுள் ஹக்…
MyHoster

அரவக்குறிச்சியின் ஆரோக்கியம் வழக்கறிஞர் பஜ்லுள் ஹக்…

*அரவக்குறிச்சியின் ஆரோக்கியம் வழக்கறிஞர் பஜ்லுள் ஹக்*

நான் கண்டு வியந்தவர்களில் அவரும் ஒருவர். 20 ஆண்டுகளுக்கு முன் பார்த்த அதே தோற்றம் என்றும் இளமையும் சுறுசுறுப்பும் அழகை அதிகரிக்கும் அழகே அவரின் ஆரோக்கியம். பல்வேறு தேவைகளுக்காகவும் பொது நலனுக்காகவும் அவரை சந்திக்க செல்வோம். இலவசமாக செய்து கொடுப்பார், நண்பர் அப்துல் ஹமீது ஹஸனி காசிமிஅறிமுகம் செய்து வைத்தார். அன்றிலிருந்து எங்கள் நட்பு தொடர்கிறது. நமது மதரஸாவின் முறைப்படுத்த வேண்டும் என ஆலோசித்த போது டிரஸ்ட் டீடு ஒன்றே தயார் செய்து பத்திரப்பதிவ செய்ய வழிவகை செய்தார். தந்தை பொறியாளராக அரசு பணியில் இருந்தது அவருக்கு கூடுதல் சக்தியானது. பழனிக்கு யாத்திரை செல்ல வருபவர்கள் ஓய்வெடுக்க ஒரு இடத்தையும் ஒதுக்கி சகோதரத்துவத்தை முன் உதாரணமாக்கினார். பல கோயில்களுக்கு தர்ம கர்த்தா வாகவும் இருக்கிறார். அரவக்குறிச்சி பள்ளியில் முத்தவல்லியாக பொறுப்பேற்றார், பள்ளி பழைய நிலையில் இருப்பதை புதுப்பிக்க ஆலோசித்தார், வழக்கம்போல் எதிர்ப்புகள் கிளம்பின, ஆனாலும் அசரவில்லை, மார்க்க அறிஞர்களிடம் ஆலோசனை கேட்டார். பத்துக்கு பத்து அறையில் இருந்து கொண்டே பல லட்சங்கள் திரட்டி பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் பள்ளியை வானுயர உயர்த்தினார். உள் பள்ளியில் 15 நபர்கள் தொழுத காலம் மாறி, இன்று ஒரே அரங்கில் 500 நபர்கள் அமர்ந்து தொழுகும் அளவிற்கு வசதி கூடியது, முணங்கல் சப்தத்தை செவியேற்கவில்லை, ஏசி பேசியவர்களை கவனத்தில் வைக்கவில்லை, பலரின் கிண்டலிலும் அவர் சுண்டல் சாப்பிட்டார், வசைபாடல் அவருக்கு வசதியானது. பழிச் சொல்அவருக்கு வாய்ப்பானது, வளர்ச்சியில் குறை சொல்ல பலர் இருக்கிறார் எனில் உயர்கிறோம் என்ற அர்த்தத்தை உண்மையாகினார்., முயற்சித்தார் போராடினார் வெற்றியும் கண்டார அவசியமென்றால் அழைப்பார் இமாமத் செய்ய ஆள் இல்லை உடனே ஓடிச் செல்வேன் அப்போது நான் அண்ணா நகர் பள்ளியில் இமாமத் பணியில் இருந்த போதும் வேறு நபரை நியமித்து விட்டு அவசரமாய் அவர் அழைப்பிற்கு பதில் சொல்வேன். அவரின் கையெழுத்து பலரின் தலையெழுத்தை மாற்றி இருக்கிறது…

ஆம். அவர் கெஜட் ஆபிஸர்*

தனது வீட்டில் ஒரு அறை ஒதுக்கி நடத்தி வந்த அலுவலகத்தை இப்போது பத்திர பதிவு அலுவலகத்திற்கு பின்னால் ஒரு அலுவலகம் திறந்து, பலருக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கி கொடுத்து தனது சேவையை விரிவாக்கம் செய்திருக்கிறார்.

பத்திர பதிவின் சுறுசுறுப்பும் அதிகரிக்கிறது…சின்ன தாராபுரம் செல்லும் வழியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆங்கிலம் வழியில் பள்ளி நடத்தி வருகிறார். கரூர் மாவட்டத்தில் இஸ்லாமியஒழுக்கத்துடன் கூடிய கல்வி வளர்ச்சியில் ஆங்கில வழியில் இரண்டே மேல்நிலை பள்ளிக்கூடங்கள் ஒன்று பள்ளப்பட்டி க்ரசென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றொன்று பி எஸ் பி மெட்ரிகுலேஷன் பள்ளி, அல்லாஹ்வின் அருட்கொடைகள் அவருக்கு விசாலமாய் கிடைத்திருக்கிறது.

அவர் இதயம் விசாலமாய் சிந்திக்கட்டும் செயல்படட்டும்…

முயற்சித்தவர் பெற்றுக் கொள்வார் என்ற பழமொழிக்கேற்ப அவர் முயற்சிகள் மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள்…

ஆலிம் அ ரிபாய்தின் ஹஸனி பள்ளபட்டி கரூர் மாவட்டம்

Bala Trust

About Admin

Check Also

கரூரில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு 59 வது நினைவு நாளில் காங்கிரஸ் கட்சியினர் மலர் மலை அணிவித்து மலர்கள் தூவி புகழஞ்சலி செலுத்தினர்…

கரூர்.27-05-23. கரூரில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு 59 வது நினைவு நாளில் காங்கிரஸ் கட்சியினர் மலர் மலை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES