
வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.1 ரூபாய் 40 காசுகள் அதிகரித்துள்ளது.
சென்னை,
தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் சற்று குறைந்து, அதன் பின்னர் ‘கிடுகிடு’வென அதிகரித்தது.
அதன்படி, கடந்த 19-ந் தேதி ஒரு பவுன் ரூ.44 ஆயிரத்து 480-க்கு உயர்ந்து, வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. உலக சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதன் காரணமாக விலை ஏற்றத்துடன் இருப்பதாக கூறப்பட்டது. இ
ந்த நிலையில் தொடர்ந்து உச்சத்தை தொட்டு வந்த தங்கம் விலை, நேற்று மாலை அதிரடியாக ரூ.800 குறைந்து இருந்தது. இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து 44 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 540 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 ரூபாய் 40 காசுகள் அதிகரித்து 75 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்க மைய வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியதே தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.