Saturday , June 3 2023
Breaking News
Home / ஈரோடு / ஈரோடு அருகே பைக் மீது வேன் மோதி அக்கா – தம்பி பலி
MyHoster

ஈரோடு அருகே பைக் மீது வேன் மோதி அக்கா – தம்பி பலி

ஞான சவுந்தர்யா தனது கணவர் அசோக்குடன் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வசித்து வந்தார்.

ஈரோடு ,

ஈரோடு மாவட்டம் பெரிய கொடிவேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு ஞான சவுந்தர்யா (22) என்ற மகளும், கிருஷ்ணமூர்த்தி (19) என்ற மகனும் உள்ளனர். ஞான சவுந்தர்யாவுக்கு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த அசோக் என்பவருடன் திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

ஞான சவுந்தர்யா தனது கணவர் அசோக்குடன் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வசித்து வந்தார். ஞானசவுந்தர்யாவை பெரியகொடிவேரியில் உள்ள அவரது தம்பி கிருஷ்ண மூர்த்தி வீட்டுக்கு அழைத்து வருவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் குமாரபாளையம் சென்று உள்ளார்.

கிருஷ்ணமூர்த்தி ஞான சவுந்தர்யாவை அழைத்து கொண்டு குமாரபாளையத்தில் இருந்து பவானி – சத்தியமங்கலம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

ஆப்பக்கூடல் போலீஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த வேன் ஒன்று கிருஷ்ணமூர்த்தி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த ஞான சவுந்தர்யா பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Bala Trust

About Admin

Check Also

இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்நாடு கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறை, SKM லைப் கேர் இரத்தப் பரிசோதனை நிலையம், பாலா அறக்கட்டளை, வெள்ளியணை ஊராட்சி, அரசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்நாடு கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறை, SKM லைப் கேர் இரத்தப் பரிசோதனை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES