Saturday , June 3 2023
Breaking News
Home / வட மாவட்டங்கள் / சென்னை / முறைகேடு செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம் – தாம்பரம் போலீஸ் கமிஷனர் உத்தரவு
MyHoster

முறைகேடு செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம் – தாம்பரம் போலீஸ் கமிஷனர் உத்தரவு

முறைகேடு செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம் செய்ய தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

சென்னை

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ராணி. இவர், விபத்து குறித்து விசாரணைக்காக வரும் பொதுமக்களிடம் பணம் அதிகமாக வசூலிப்பதாகவும், விபத்து இழப்பீடு வழக்குகளை தனக்கு தெரிந்த வக்கீல்கள் மூலமாக இழப்பீடு தொகைகளில் கமிஷன் பெற்றதாகவும் புகார்கள் வந்தன.

இதுபற்றி தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் பள்ளிக்கரணை போலீஸ் துணை கமிஷனர் ஜேம்ஸ் தங்கையா விசாரித்தார். அதில் பெண் இன்ஸ்பெக்டர், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது உண்மை என தெரிந்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் பெண் இன்ஸ்பெக்டர் ராணியை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தாம்பரம் ஆணையரக கூடுதல் கமிஷனர் காமினி கடந்த 7 மாதங்களாக நடத்திய விசாரணையில் இன்ஸ்பெக்டர் ராணி முறைகேடுகளில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதாக தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். இதையடுத்து பெண் இன்ஸ்பெக்டர் ராணியை பணி நீக்கம் செய்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

Bala Trust

About Admin

Check Also

இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்நாடு கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறை, SKM லைப் கேர் இரத்தப் பரிசோதனை நிலையம், பாலா அறக்கட்டளை, வெள்ளியணை ஊராட்சி, அரசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்நாடு கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறை, SKM லைப் கேர் இரத்தப் பரிசோதனை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES