
ரேஷன் கடைகளில் கம்பு, கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். விவசாயிகளின் அடையாளமாக கருதப்படும் பச்சைத் துண்டை அணிந்து வந்த அமைச்சர், வேளாண் பட்ஜெட்டை வாசித்தார்.
சிறுதானியங்கள் தொடர்பாக அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர், “ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க 82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுதானிய உற்பத்தி பரப்பை அதிகரிக்கும் பொருட்டு கடந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் 20 மாவட்டங்களை உள்ளடக்கி அறிவிக்கப்பட்ட இரண்டு சிறு தானிய மண்டலங்களில், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்கள் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படும்.