வடமாநிலத்தவர்களின் குவிப்பை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் #உள்நுழைவு_அனுமதிச்சீட்டு
(Innerline Permit) முறையை அமல்படுத்த
சேலம் அரசு சட்டக்கல்லூரியில் மாணவர்கள் காத்திருப்பு போராட்டம்!
இந்தி முதலாளிகள்- தொழிலாளிகளின் ஆதிக்கத்தால் தமிழ்நாட்டின் மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், வணிகர்களின் உரிமையும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதை கண்டித்தும் தமிழ்நாடு அரசு
இதற்கு என தனி சட்டம் இயற்ற வலியுறுத்தியும் சேலம் அரசு சட்டக்கல்லூரியில் மாணவர்கள் போரட்டத்தை துவங்கி உள்ளனர்.
- நாகலாந்து, மிசோரம், அசாம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் இருக்கும் உள்நுழைவு அனுமதி சீட்டு முறையை போல
தமிழ்நாட்டிலும் தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும்.
- தமிழ்நாட்டில் உள்ள
இந்திய அரசு, தமிழ்நாடு அரசு தனியார் நிறுவனங்களில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் என #அனைத்திலும்
தமிழ்நாட்டின் மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு 90 விழுக்காடு #இடஒதுக்கீடு வழங்க வேண்டும். - தமிழ்நாட்டில்,
இந்திய அரசின் #ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கும் இந்திய அளவில் தகுதி மதிப்பெண் வாங்கிய தமிழ்நாட்டின் மாணவர்களுக்கே #முன்னுரிமை தரவேண்டும். - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில்
தற்போது நடைமுறையில் இருக்கும் வெளியார்களும் போட்டித்தேர்வுகளில் பங்கேற்கலாம் என்ற விதியை தமிழ்நாடு அரசு #திரும்ப பெற்று 100 விழுக்காடு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு
அரசு பணியினை
உறுதி செய்திட வேண்டும்.
- தமிழ்நாடு அரசு,
தமிழ்நாட்டில் உள்ள
அமைப்புசாராதொழிலாளர்கள் பற்றிய முழுமையான விபரங்கள் அடங்கிய தொகுப்பினை கொண்டு
இந்திய அரசின் e-SHRAM பதிவு நடைமுறைகள் போன்று தமிழ்நாடு அரசு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு ஆணையத்தை உருவாக்கி, தமிழ்நாட்டிற்கு தேவையான பணியாளர்கள், அவர்களின் கூலி, பணி நேரம், அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் முதலியனவற்றை பதிவு செய்யும் நடைமுறையை கொண்டுவர வேண்டும்.
என 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை
சேலம் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் துவங்கியுள்ளனர்.
வெல்லட்டும் மாணவர்கள் போராட்டம்..
பரத்ராம் முத்தையா
