அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா மற்றும் அஞ்சல் துறையின் செல்வமகள் சேமிப்புத்திட்டம் அறிமுக விழா. கரூரில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் முதலிடம் பெற்ற அஸ்வந்த் ஹேமஸ்ரீ மற்றும் பத்து வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் சர்வேஸ் முதலிடம். மேலும் அம்ரிதா, பூவிதா,திகழ் முன்னணி இடங்களைப் பெற்றனர். அவர்களுக்குப் பயிற்சி அளித்த டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் வீரமலை ஐயா அவர்களும் உறுதுணையாக நின்ற பாஸ்கர் அவர்களும் வாழ்த்திப் பாராட்டினர். மேலும் அரவக்குறிச்சி அஞ்சல்துறை சார்பில் சண்முகவேல் கலையரசி ஆகியோர் கலந்து கொண்டு செல்வமகள் சேமிப்பு கணக்கானது 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 250 செலுத்தி கணக்கை துவங்கலாம் 15 வருடங்கள் பணம் செலுத்துவதன் வாயிலாகப் பெண் குழந்தைகளின் மேற்படிப்பிற்கும் திருமண நிகழ்விற்கும் உதவுவதும் மிகச் சிறப்பான வட்டியினை வழங்குவதோடு பெண் பிள்ளைகள் தங்கள் எதிர்காலத்திற்கு உதவக் கூடியதாக இருக்கக்கூடிய இத்திட்டத்தினை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கான பொன்மகன் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது தலைமை ஆசிரியர் சாகுல் அமீது வரவேற்றார். உதவி ஆசிரியை புவனேஸ்வரி நன்றி கூறினார்.
