மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழக அரசின் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதிய குளிர்சாதன பேருந்தை உசிலம்பட்டியில் இருந்து சென்னை செல்வதற்கு புதிய பேருந்தை சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மதுரை மத்திய அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் ஜெயராஜ், மண்டல துணைச் செயலாளர் ராஜாங்கம், உசிலை அரசு போக்குவரத்து கிளை மேலாளர் கண்ணன், உசிலை நகர செயலாளர் பூமாராஜா, உசிலை அண்ணா தொழிற்சங்கத்தின் கிளை தலைவர் ராமர், செயலாளர் ரோஷன்லால், பொருளாளர் சேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
