சமீபத்தில் நக்கீரன் மற்றும் நியூஸ்18 ஊடகத்தில் வெளியான செய்திகள் தனியார் மருத்துவமனைகளில் மனிதத்தன்மையற்ற ஒரு திருட்டு மற்றும் அதில் தொடர்பில் உள்ள 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் குறித்த செய்தி இந்த சேவை திட்டத்தில் நேர்மையாகவும் பொறுப்புடனும் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்.தொழிலாளர்களும் எங்களது தொழிற்சங்கமும் இந்த 108 ஆம்புலன்ஸ் சேவையை பாதுகாப்பதற்காக எடுத்துவரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக பெற்றிருக்கும் நன் மதிப்பை சீர்குலைய உள்ளதை நினைத்து வருந்துகிறோம்.
.
இதுபோன்ற உறுப்பு திருட்டு உள்ளிட்ட முறைகேடுகள் மாநிலம் முழுவதும் பரவலாகவும் குறிப்பாக இப்போது சிக்கியுள்ள குளோபல் மருத்துவமனையிலும் நடைபெற்று வருவது குறித்து ஜி வி கே_ இ எம் ஆர் ஐ நிர்வாகத்திற்கு எங்களது சங்கம் பலமுறை புகார் கொடுத்தும் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது அம்பலமாகி உள்ள தனியார் குளோபல் மருத்துவமனை தொடர்பு குறித்து பலமுறை எங்கள் சங்கத்தின் சார்பில் மாநில தலைமை அதிகாரி உயர் திரு செல்வகுமார் எஸ் ஹெச் ஒ .அவர்களிடம் புகார் தெரிவித்துள்ளோம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுங்கள் இந்தக் குற்றத்தின் பின்னணியில் பல ஜிவிகே -இ எம்ஆர்ஐ நிர்வாக அதிகாரிகள் மற்றும் தலைமை அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் சம்பந்தப்பட்டு உள்ளார்கள் என்பதை பலமுறை உயர்திரு. மாநில தலைமை அதிகாரி அவர்களிடம் எங்கள் சங்கத்தின் சார்பில் புகார் தெரிவித்து உள்ளோம் மேலும் தற்போது புகாருக்கு ஆளாகியுள்ள தனியார் குளோபல் மருத்துவமனையில்GVKEMRI நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி ஒருவர் வேலை பார்த்து வந்தார். அவர் தொடர்பில்GVK-EMRI நிர்வாக அதிகாரிகள் பலரும் குற்ற பின்னணியில் தொடர்பிருக்கலாம். இந்த நிலையில் இதுகுறித்து ஊடகத்திற்கு விளக்கம் அளித்துள்ள GVK-EMRI நிர்வாகம் தாமே உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போவதாக தெரிவித்துள்ளது. எங்களுக்கு மேலும் சந்தேகத்தை வலுவடையச் செய்கிறது எங்கள் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் இணைப்பு COITU தொழிலாளர்கள் தங்களது கடமையை சீரிய கட்டுப்பாட்டுடனும் சேவை மனப்பான்மையுடனும் பொது மக்களுக்கு ஆற்ற வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எங்கள் சங்கம் ஒவ்வொரு கூட்டத்திலும் இதனை உறுதிமொழியாக வாசித்து ஒவ்வொரு தொழிலாளர்களும் இந்த உறுதிமொழியை ஏற்று வருகிறோம். மேலும் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் நமது தொழிற்சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் தகுதியை இழப்பார்கள் என்பதும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் ஆனால்GVK-EMRI நிர்வாகம் இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பதே வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்த நிலையில் GVK-EMRI நிர்வாகத்தின் விசாரணை என்பது கண்டிப்பாக வெறும் கண்துடைப்புக்காக அவர்களுக்கு சாதகமானதாகவே மேலும் நிர்வாக அதிகாரி களையும் காப்பாற்றும் தன்மை தான் அமையும் எனவே இந்த உறுப்பு திருட்டு புகார் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்து காவல் துறையோ அல்லது சிபிசிஐடி போன்ற சிறப்பு விசாரணை அமைப்பு விசாரணை நடத்தினால்தான் உரிய உண்மை வெளிவரும் மன்னிக்க முடியாத மனித குல விரோத குற்றம் ஆகிய உறுப்பு திருட்டு குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் தண்டிக்கப்படுவார்கள் பொதுமக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இடையூறும் இல்லாமல் 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தை பயன்படுத்த முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். என மாநில துணை தலைவர் சிவகுமார் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.