கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்ச்சம்பட்டியில் ரூபாய் 32.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கால்நடை மருந்தக கட்டிடத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்கள் திறந்து வைத்தார். முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின் பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புக்கான மருத்துவ அட்டை மற்றும் தாது உப்பு ஆகியவற்றை வழங்கினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. முடிவில் மருத்துவ கட்டிட வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் விஜயன், வட்டாட்சியர் செந்தில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நல்லுசாமி, கால்நடை மருத்துவ இணை இயக்குனர் ஜெகதீசன், மருத்துவர்கள் பிரபாகர் சதீஷ், ரமேஷ், புஷ்பலதா, ஜெகதீசன், அபிநய செல்வி, கீதா, கால்நடை மருத்துவ ஆய்வாளர்கள் சிவகுமார், ஜானகி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் சிவகுமார், கலைச்செல்வி, சங்கர், முனியம்மாள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Home / தமிழகம் / கரூர் தோகைமலை அருகே அவர் ஆர்ச்சம்பட்டியில் கால்நடை மருந்தக கட்டிடம் திறப்பு விழா அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பங்கேற்பு.
Check Also
இணைந்து எழு கரூர் கூட்டம்…
25/11/2023 இன்று கரூரில் நடைபெற்ற இணைந்து எழு கரூர் என்ற குழு கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்ற …