Wednesday , June 7 2023
Breaking News
Home / கரூர் / இன்று ஒரு பள்ளியில் விழா. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்…
MyHoster

இன்று ஒரு பள்ளியில் விழா. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்…

இன்று ஒரு பள்ளியில் விழா. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

சுமார் 150 வருடங்கள் வயது கொண்ட கரூர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளி அது.

பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியரும்
98 வயதான கல்வியாளருமான
B.S.D சார் என்று எல்லோராலும் விரும்பி வணங்கப்படும் பி.செல்வதுரை அவர்கள் விழாவிற்கு வந்து முன்வரிசையில் அமர்ந்திருந்தார். அவருக்கு அடுத்து இருபுறத்திலும் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவரான நானும் , செயலரான திரு விசா. குணசேகரன் அவர்களும் அமர்ந்து மூவரும் பழைய நினைவுகளைப் சுவாரசியமாகப் பகிர்ந்து கொண்டிருந்தோம்.

“மினிஸ்டர்
செந்தில் பாலாஜி கூட என்னிடம் படித்தவர் தான். ஆங்கிலம் கற்றுக் கொண்டார்” என்று
BSD சார் பெருமிதத்தோடு என்னிடம் சொல்லிக் கொண்டிருந்த வேளையில் சரியாக
விழா தொடங்கியது.

மேடை ஏற போன அமைச்சர்
செந்தில் பாலாஜி
BSD சாரைக் கண்டவுடன் மேடை ஏறாமல் எங்கள் அருகே வந்து சாரின் பாதம் தொட்டு வணங்கி ஆசி பெற்றார்.

ஒரு நண்பராக செந்தில் பாலாஜியின் அன்பு எப்படிப்பட்டது என்று ஏற்கனவே எனக்குத் தெரியும்.

ஒரு பத்திரிகையாளராக
அவரது அணுகுமுறையும் அடக்கமும் எப்படிப்பட்டது என்பதை பல முறை பார்த்து வியந்திருக்கிறேன்.

இன்று அவருடைய
குரு பக்தி எவ்வளவு உயர்ந்தது என்பதைக் கண்ணால் கண்டு வியந்து போனேன்.

இப்போது கூட
அந்த ஒரு நிமிட நிகழ்வை வர்ணிக்க வார்த்தைகளின்றித் தவிக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

விழா முடிந்து எல்லோரும் கிளம்பி கொண்டிருந்தோம்.
பள்ளி வாசல் அருகே வந்து கொண்டிருந்த போது
BSD சார் என்னிடம் ‘மினிஸ்டர் போய் விட்டாரா ?’என்று கேட்டார்.

அப்போது அமைச்சரின் கார் புறப்பட்டுக் கொண்டிருந்தது. நான் ஆசிரியரிடம் ‘ஏன் சார் என்ன விஷயம் ?’ என்று கேட்டேன்.

பார்க்க ஆசைப்படுவதாகச் சொன்னார் எங்கள் குரு.

நான் வேகமாகச் சென்று காரில் ஏறி அமர்ந்து விட்ட அமைச்சரிடம் விஷயத்தைச் சொன்னேன்.

“நீங்கள் இருவரும் போய் விட்டதாக அல்லவா நினைத்தேன்” என்று சொல்லியபடியே காரைவிட்டு இறங்கி வேகமாக BSD சாரிடம் நெருங்கி மீண்டும் அவரது பாதம் தொட்டு வணங்கி ஆசி பெற்று அவரிடம் ஓரிரு நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார் அமைச்சர்.

புறப்படும்போது BSD சாரிடம் “கூடிய சீக்கிரம் சிவராமன் அண்ணனோடு உங்கள் வீட்டிற்கு வந்து உங்களைச் சந்திக்கிறேன்”என்று கூறி வணங்கியபடியே விடைபெற்றார் அமைச்சர்.

எனது 35 ஆண்டுகால பத்திரிகை உலக அனுபவத்தில் இப்படி ஒரு அன்பு, அடக்கம், குரு பக்தி கொண்ட அரசியல்வாதியை நான் சந்தித்ததில்லை.

அமைச்சர் செந்தில் பாலாஜியின்
அன்பு அடக்கம் நிறைந்த குருபக்தி இன்னும் அவரை உயரத்தில்
பறக்க வைக்கும். உச்சத்தில் நிறுத்தி வைக்கும் என்று அப்போது மனதில் தோன்றியது.

சங்கர் தயாள் சர்மா ஜனாதிபதியாக இருந்தபோது தேசிய நல்லாசிரியர் விருது பெற வந்த தமிழக ஆசிரியர் பாண்டியன் ஐயாவை
பாதம் பணிந்து வணங்கி விருது வழங்கியதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

அக்காட்சி போல் இன்றைய காட்சியும்
என் மனதில் என்றும் இருக்கும்.

‘குருவருள் பெற்றார் திருவருள் பெறுவார்’ என்கிறது சித்தர் இலக்கியம்.

குரு பக்தி கொண்ட செந்தில் பாலாஜி மென்மேலும் சிறக்க அன்போடு வாழ்த்துகிறேன்.

சிவராமன்,
மத்திய மண்டலத் தலைவர்,
தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம்.

Bala Trust

About Admin

Check Also

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சமூக ஊடகத்துறை நிர்வாகிகள் நியமனம்…

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சமூக ஊடகத்துறை நிர்வாகிகள் நியமனம் மற்றும் ஆலோசனை கூட்டம் மாநகர் தலைவர் தமிழரசன் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES