தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு 26ஆம் தேதி சனிக்கிழமை 4வது வாரம் என்பதால் அன்று வழக்கம் போல் பள்ளி அலுவல் நாளாக இருக்கும்.
அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால், சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்கு பயனளிக்கும் என்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 26ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதே சமயம், அக்டோபர் 28ஆம் தேதி திங்கட்கிழமை விடுமுறை தேவைப்படும் மாவட்டங்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்துவிட்டு, வேறொரு சனிக்கிழமையில் பள்ளி வேலை நாளாக அறிவிக்கலாம் என்றும், தேவைப்படும் பள்ளிகளும் விடுமுறை அறிவிக்கலாம் என்றும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.