
திருவள்ளுர் மாவட்டம் காவல்துறை சார்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் அரண்வாயலில் உள்ள பிரித்திஉஷா பொறியியல் கல்லூரியில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர் காஞ்சிபுரம் சாரக காவல்துறை துணை தலைவர் சாமுண்டீஸ்வரி அவர்கள் கலந்துகொண்டு பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் பாலியல் குற்றங்களைப் பற்றியும் அதனை எவ்வாறு தடுப்பது என்பதைப் பற்றியும் விழிப்புணர்வினை வழங்கினார்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்வில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் துரைப்பாண்டியன் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் பொன்னேரி காவல் துணை கண்காணிப்பாளர் கல்பனா தத் ஆய்வாளர்கள் துணை ஆய்வாளர்கள் ஆண் மற்றும் பெண் காவலர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் விழாவில்இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களில் இருந்து பெண் ஊழியர்களை வரவழைத்து அவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு அவர்கள் மூலம் அந்த நிறுவனங்களில் விழிப்புணர்வு வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.