திருப்பூரில் பண மோசடி பதறுகிறது திருப்பூர் சுற்றியுள்ள கிராமங்கள் மகளிர் சுய உதவிக்குழு மூலமாக பணம் தருவதாக கூறிய சில முகம் தெரியாத ஆசாமிகள் விளையாட்டு திருப்பூரில் உள்ள உகாயனூர் கிராமம் நேற்று முன்தினம் இருவர் இந்த பகுதியில் வந்து மகளிர் சுய உதவிக்குழு மூலமாக பணம் தருவதாக கூறி ஆதார் கார்டு ஜெராக்ஸ் வாங்கி சென்றுள்ளனர், பின்பு மறுநாள் காலை அவர்கள் தொலைபேசி மூலமாக அழைத்து ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் மொத்தம் 10 பேருக்கு 10 லட்சம் ரூபாய் சாங்ஸ் இன் ஆகியிருக்கிறது என்று கூறியுள்ளார்கள் அதன்பிறகு இன்சுரன்ஸ் ஆயிரம் ரூபாயும் டாக்குமெண்ட் சார்ஜ் 850 ரூபாய் தங்களுடைய பேங்க் அக்கவுண்டில் கட்ட சொல்லியுள்ளார்கள் பிறகு 6 மணி நேரத்தில் உங்களுக்கு பணம் வீடு தேடி வரும் என்று சொல்லிவிட்டார்கள்.
கிராமத்து மக்கள் பேங்க் மூலமாக 18 ஆயிரத்து 500 ரூபாய் கட்டி உள்ளார்கள் பிறகு அவர்கள் மாலை ஆறு மணி ஆகிவிட்டது நாளை காலை வந்து பணம் தருவதாக சொல்லி உள்ளார்கள் பிறகு மாலை 3 மணிக்கு தருவதாகச் சொல்லி உள்ளார்கள், மணி நான் காயும் பணம் வந்து சேரவில்லை மக்களிடையே சந்தேகம் வரக் கிளம்பியது சற்று சிந்திக்க ஆரம்பித்தார்கள்… அப்பொழுது தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்ந்த பல்லடம் சட்டமன்ற தொகுதி நகர தலைவர் அந்தோணி இடம் முறையிட்டுள்ளனர், அவர் அந்த மர்ம நபர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் இருந்தும் பயனில்லை அவர்கள் பணத்தை திருப்பித் தருவதாக கூறியும் திருப்பித் தரவில்லை பிறகு பாதிக்கப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம் பண மோசடி பற்றி தகவல் அறிவித்து மனு கொடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக தனிப்படை அமைத்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கண்காணிப்பாளர் உத்தரவாதம் கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் மனுவை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு கொடுத்த மாவட்ட கண்காணிப்பாளர் அம்மா அவர்களுக்கு நன்றி.
தமிழ்நாடு இளைஞர் கட்சி,
பல்லடம் நகர தலைவர்,
அந்தோனி மரிய ராஜ்.