பண்டைய காலத்தில் உருவாக்கிய, அனைத்து கோயில்களும்,மற்றும் சிற்பங்களும்,காலத்தால் அழியா வண்ணம் உருவாக்கி னார்கள்,ஏனெனில்
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. சிற்பங்களையும், அவற்றின் தத்துவங்களையும், அர்த்தங்களையும் புரிந்து கொண்டால் மனித வாழ்வியலுக்கு தேவையான அனைத்தும் இங்கேயே கிடைத்து விடும். ஆதிகாலத்தில் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த மனிதர்களுக்கு எந்த ஒரு வியாதியும் வந்ததில்லை. இந்த காலத்திலும் கூட இயற்கையோடு ஒட்டி வாழ்கின்ற பறவைகளுக்கும் , விலங்கினங்களுக்கும் மனிதனை போல் பெருவாரியான துன்பம் அடைவதில்லை.
இன்றைய கால அவசர நிலை வாழ்க்கையில் இரவு, பகல் ஓய்வின்றி உழைக்கிறோம். இந்த வாழ்க்கையில் நாம் சேமித்தது என்ன?
வியாதியும், மன அமைதியின்மையும், அளவுக்கு அதிகமான மன அழுத்தம் தான் மிச்சம். இரவு பகலாக ஓய்வின்றி உழைத்து சேமித்த பணத்தை பிற்பகுதியில் மருத்துவமனைக்கும், நோய்களுக்குமே அதிகமாக செலவழிக்கிறோம். ஆனால் ஆதிகாலத்தில் வாழ்ந்தவர்கள் இயற்கை உணவுகளையும், பக்தி மார்க்கத்தையும், ஒழுக்க நெறிகளையும் கற்று கொடுத்துவிட்டு சென்றார்கள். இவை மட்டுமல்ல சாதாரணமாக ஒரு மனிதன் 120 வருட காலங்கள் உயிர் வாழ முடியும். இத்தனை வருடங்கள் ஒருவரால் உயிர் வாழ முடியுமா என்றால் அது சாத்தியமே. மனிதன் தன் அறிவை உணர்ந்து முக்தி அறிவை தெரிந்து கொள்வதன் மூலமாக ஒவ்வொரு சிலை வடிவங்களும் ஒவ்வொரு ஆக்கப்பூர்வமான சக்தி, அதனை இறைசக்தி என்றும் கூறலாம். இதனையே சற்று ஆழமான வார்த்தைகளாக சொல்ல வேண்டுமானால் “முத்ரா” என்றும் கூறலாம்.
ஒவ்வொரு முத்ராவும் மனிதனின் உடலில் ஒவ்வொரு விதமான வியாதிகளை குணமாக்கும் சக்தி பெற்றவை. இந்த முத்ரா பயிற்சியை பண்டைய காலங்களில் சிற்ப சாஸ்த்ர நிபுணர்களும், ஸ்தபதிகளும் தன்னுள் ஆராய்ந்ததால் தான் அவர்களால் ஒவ்வொரு முத்ராக்களுக்குமான உருவத்தை மிகத் தெள்ளத்தெளிவாக கல் மண்டபங்களிலும், தூண்களிலும் மூலகர்ப்ப க்ரகங்களிலும் வடித்து வைக்க முடிந்தது.
இப்படி ஒவ்வொரு சிற்ப வடிவங்களிலும் நமது ஆரோக்கியத்தை நன்முறையில் பேணி காப்பதற்கான அனைத்து விஷயங்களும் ஆதாரபூர்வமாக நிலைநிறுத்திய இடமே கோவில்கள்.
எங்கள் குருஜீ திரு. பஞ்சமுர்த்தி இராஜேந்திரன் அவர்கள் தனது வாழ்நாளில் கிட்டதட்ட 840 முத்ராக்களையும், அதன் பயன்களையும் தனது 30 வருட ஆராய்ச்சியில் ஒவ்வொரு சிற்பத்தின் வடிவங்களையும் உணர்ந்து அதன்முலம் ஜாதி, மத, இன பேதமில்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் கற்று கொடுக்கிறார். இவரால் பலனடைந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பல…
காலம்: 7 நாட்கள்,
நேரம்:காலை 5.30 To 7.30am,
கட்டணம் : Rs.1000 / (நபர் + இயற்கை உணவு (கோயில் திருப்பணிக்காக))
28-1-23, ஞாயிறு காலை 11 am – 1 pm வரை, பொன்னமாப்பேட்டை, இராமலிங்க செளடேஸ்வரி அம்மன் வழிபாட்டு மண்டபம் மாடியில்.
ஆண்கள், பெண்கள், மற்றும் 10 வயத்திற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இந்த அரிய வாய்பினை பயன்படுத்தி தாங்களும், தாங்கள் குடும்பமும் நோய் நொடியின்றி, சீறும் சிறப்புடன் வாழ ஸ்ரீ ஆத்ம முத்ரா அறக்கட்டளை அன்போடு ஆழைக்கின்றது.
மேலும் விவரங்களுக்கு:
8754240646 – Guruji.
9367445517 – குணாளன்
