Saturday , May 27 2023
Breaking News
Home / Uncategorized / புரட்டாசி – புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது–அறிவியல் உண்மை
MyHoster

புரட்டாசி – புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது–அறிவியல் உண்மை

கரூர் 20 செப்டம்பர் 2019

புரட்டாசி

புரட்டாசி (புரட்டாதி) தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டொன்றின் ஆறாவது மாதம் ஆகும். சூரியன் கன்னி இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 30 நாள், 27 நாடி, 22 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி, புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாதுஅறிவியல் உண்மை

நமது முன்னோர்கள் நமக்கு சொல்லித்தந்த பல விடயங்களுக்கு பின் அறிவியல் ஒளிந்துள்ளது. அந்த வகையில் புரட்டாசி மாதத்தில் அசைவ உணவை சாப்பிட கூடாது என்று சொன்னதற்கு பின்பு ஒரு சிறந்த அறிவியல் இருக்கத்தான் செய்கிறது. வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.

புரட்டாசி மாதத்தில் பொதுவாக சூரியனில் இருந்து வரும் வெளிச்சம் சற்று குறைவாகவே இருக்கும். அதோடு இந்த மாதத்தில் தான் மழையும் வர துவங்கும் . அனால் பூமி குளிரும்படி மழை பெய்யாது. இதனால் பூமியில் இருந்து அதிக அளவிலான வெப்பம் வெளியில் வரும். இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் நாம் அசைவ உணவு உண்பதால் உடம்பில் வெப்பம் அதிகரித்து தேவையற்ற உபாதைகள் வரும்.

சூரிய வெளிச்சம் குறைவாக இருப்பதால் இயற்கையாகவே புரட்டாசி மாதத்தில் நமது ஜீரண சக்தி குறைவாக இருக்கும். ஆகையால் அந்த நேரத்தில் அசைவ உணவை தவிர்ப்பது சிறந்தது. அதோடு இந்த மாதத்தில் பெய்யும் திடீர் மழை மூலம் ஏற்படும் வெப்ப மாறுதல்களால் பலருக்கு ஜலதோஷம், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் அதிகரிக்கும். இந்த நோய்களுக்கு சிறந்து தீர்வு துளசி.

அனைத்து பெருமாள் கோவில்களிலும் துளசி நீர் நிச்சயம் பிரசாதமாக கிடைக்கும். இதனாலேயே இந்த மாதத்தில் நம்மை அடிக்கடி பெருமாள் கோயிலிற்கு சென்று துளசி நீரை அருந்த செய்தார்கள் நம் முன்னோர்கள்.

இக்காரணங்களால் தான் நம்மை இந்த மாதத்தில் அசைவம் உண்ண கூடாது என்று கூறி தடுத்துள்ளனர், நம் முன்னோர்..!

Bala Trust

About Admin

Check Also

The Secrets of Medical Marijuana Revealed

The Secrets of Medical Marijuana Revealed You may choose to prevent marijuana when you have …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES